ரெண்டுல ஒன்ன தட்டி தூக்கினா அடுத்ததும் நான் தான் CM! எடப்பாடியின் அந்தர் ஸ்கெட்ச் மநகூ 2.ஓ...

By sathish kFirst Published Dec 7, 2018, 1:34 PM IST
Highlights

ரெண்டில் ஒன்னை தட்டித் தூக்கினால் அடுத்ததும் நான்தான்  சிஎம் என அடுத்த மநகூ 2.0  தயார் பண்ண பிளான் போட்டுள்ளாராம் எடப்பாடியார்.

துரைமுருகனின்  திரி கொடுத்தப்பட்ட அந்த பெட்டிக்குப்பின் நாங்கள் திமுகவின் தோழமை காட்சிகள் வர்ற தேர்தலில் கூட்டணியாக இருப்போம். அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என தாறுமாரு தமாஸ் பண்ணியது முன்னாள் மக்கள் நல கூட்டணி. பாவம் யாரு கண்ணு பட்டுச்சோ திமுக கூட கைகோர்த்ததுமே  வன்னி அரசு வைத்த வேட்டாள் கூட்டணிக்குள் குஸ்தி ஏற்பட்டுவிட்டது.

இதற்க்கு பதிலடி கொடுத்த வைகோ வட்டாரம், ‘திராவிட இயக்கம் தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெற என்ன செய்தது? என ஒரு லெட்டரில் விசிகவின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டது. அதுமட்டுமா கைச்செலவுக்கு காசு கொடுத்ததை கூட சொல்லிக் காட்டி அரசியல் வட்டாரத்தில் அசிங்கப்படுத்திவிட்டதாக திருமா வட்டாரம் புலம்பி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக நடப்பதை கூலாக வேடிக்கைப்பார்க்கும் முதல்வர் எடப்பாடி குஷியாகிவிட்டார். ஏற்கனவே அவர் திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது என ஒரு டீமை வைத்து நோட்டமிட்டு வருகிறார். இப்படி இருக்காள் ரகசியமாக நடப்பதையே கேட்டு சகித்து பிளான் போடும் எடப்பாடிக்கு இப்படி வெட்ட வெளிச்சம் நடந்தால் வேடிக்கை மட்டுமா பார்ப்பார்? கொக்கி போட்டு தூக்கிட்டு மாட்டாரா? அப்படித்தான் அவரது அடுத்த மூவ் இருக்கிறது.

அமைச்சர் ஒருவரிடம் ஏக குஷியில் பேசிய எடப்பாடி, ‘2016 தேர்தல்ல வைகோ, திருமாவளவன் , கம்யூனிஸ்டுகள் எல்லாம் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி அமைக்கலேன்னா இன்னிக்கு நான் முதலமைச்சரா இருக்க முடியாது, நீங்க அமைச்சரா இருக்க முடியாது.  அவங்க தோற்றது எல்லாமே வெறும் 1000, 2000,  அதுவும் 20 இடத்துல ஜெயிச்சிருந்தா திமுக தான் ஆட்சியில இருந்திருக்கும். அதனால  வைகோவும், திருமாவும் எப்பவும் மதிக்கக்கூடிய மனிதர்கள். 


அதேபோல, வர்ற எலக்‌ஷன்ல நாம பாஜக கூட கூட்டணி வைக்கிற மாதிரி இல்லை. அதுக்காக எந்தக் கூட்டணியும் இல்லாம அம்மா மாதிரி நாம தனியா நிக்கிற நிலைமையும் இப்ப இல்லை. வைகோகிட்ட பேசிப் பாருங்க. அம்மா அவரை அண்னன்னு கூப்பிட்டிருக்காங்க. அவர் நம்ம கூட வந்தாருன்னா நமக்கு களத்துல பெரிய பலமா இருக்கும். நம்மளைப் பத்தி நமக்கே தெரியாத ப்ளஸ் பாயின்ட்டை எல்லாம் வைகோ எடுத்துச் சொல்லுவாரு. பிரசாரத்துக்கு நமக்கு பெரிய தூணா இருப்பாரு. அதனால நீங்க அவர்கிட்ட முதல்ல பேசுங்க. அப்புறம் நான் பேசுறேன்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

இதையடுத்து அமைச்சர் வேலுமணி தனக்கும் வைகோவுக்கும் நெருக்கமான கோவை வட்டாரத் தொழிலதிபர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறாராம். அவரும் வைகோவிடம்  பேச்சுவார்த்தைக்கான நாள் குறித்திருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

“வைகோ மீது மட்டுமல்ல எடப்பாடிக்கு திருமாவளவன் மீதும் ஒரு மரியாதை இருக்கிறதாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த திருமாவளவனிடம் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் எடப்பாடி. அப்போது தனது பர்சனல் செல் நம்பரைக் கொடுத்த எடப்பாடி, ‘எதுனாலும் என்கிட்ட பேசுங்க.  என்ன உதவி வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் என்கிட்ட பேசுங்க. கீழேயிருந்து வந்திருக்கும் என்னைப் போன்றவங்களுக்கு உங்க ஆதரவு வேணும்’ என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். திருமாவளவனும் நன்றி சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.  இப்படி போய்க்கொண்டிருந்த வேலையில், திமுகவின் தோழமை கட்சிக்கும் நடக்கும்  குஸ்தியை ரசித்துப்  பார்த்துக் கொண்டிருக்கும் எடப்பாடி, ரெண்டில் ஒன்னை தட்டித் தூக்கினால் அடுத்ததும் நான்தான்  சிஎம் என அடுத்த மநகூ 2.0  தயார் பண்ண பிளான் போட்டுள்ளாராம் எடப்பாடியார்.

click me!