ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தது யார்? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!

By vinoth kumarFirst Published Dec 7, 2018, 12:21 PM IST
Highlights

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 35 நாட்கள் ஆன நிலையில் எந்த ஒரு அமைச்சரும் அவரை பார்க்க முடியாத நிலை இருந்தது. அதனால், அவரை வெளிநாடு அழைத்து செல்லலாம் என தம்பிதுரையிடம் கூறினேன். அவரும் சரி என கூறினார்.

இனிமேல் கட்சியின் மீது எந்த ஒரு தனிப்பட்ட குடும்பமும் ஆதிக்கம் செலுத்த முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி;- செப்டம்பர் 2014-ல் பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இடைவேளையின்போது ஜெயலலிதா என்னை அழைத்தார். தமிழகத்தின் முதல்வராக நான் இருக்க வேண்டும் என்றார். அதை நானே கட்சி எம்எல்ஏக்களிடம் சொன்னால் பலம் பொருந்தியதாக இருக்காது என நினைத்ததால், நத்தம் விஸ்வநாதனை அழைத்தார். 

நத்தம் விஸ்வநாதன் அப்போது மின் துறை அமைச்சராக இருந்தார். அவரிடம் கட்சி கூட்டத்தைக் கூட்டி தனது உத்தரவின் பேரிலேயே ஓபிஎஸ் முதல்வராக்கப்படுவதாக அறிவிக்கச் சொன்னார். தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தபோதும் அவர் தெளிவாகவே முடிவு எடுத்தார். அவரது அந்த முடிவு அவர் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடையாளம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 35 நாட்கள் ஆன நிலையில் எந்த ஒரு அமைச்சரும் அவரை பார்க்க முடியாத நிலை இருந்தது. அதனால், அவரை வெளிநாடு அழைத்து செல்லலாம் என தம்பிதுரையிடம் கூறினேன். அவரும் சரி என கூறினார். 

இதுபற்றி அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடமும் பேசினேன். அவர்கள்தான் டாக்டர்களை ஏற்பாடு செய்தனர். அடுத்தநாள், அப்பலோ நிறுவன தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜய் குமார் ரெட்டி என்னிடம், ஜெயலலிதாவின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என சொன்ன பிறகு வெளிநாட்டு சிகிச்சை யோசனையை நான் விட்டுவிட்டேன்.

கட்சியில் எடப்பாடியுடன் நான் இணைந்த பிறகு, கட்சி சுமுகமாக நடைபெறுகிறது. எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல்தான் நான் இணைப்புக்கு சம்மதித்தேன். ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட ஆட்சி ஆட்டம் காணக்கூடாது என்பது எனது நோக்கமாக இருந்தது. அந்த நேரத்தில் தினகரன் ஆட்சியை கவிழ்க்க எல்லாவித சதிகளையும் செய்தார். நான் தர்மயுத்தம் தொடங்கிய நோக்கம் நிறைவேற வேண்டும். அதற்காகவே இணைப்புக்கு சம்மதித்தேன். எனது மனசாட்சிப்படி நான் நடந்தேன். மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என மற்றவர்களும் எனது பிரச்சாரத்துக்கு துணை நின்றனர். தென் மாவட்டங்களில் அதிருப்தியாளர்கள் மட்டுமே தினகரன் பக்கம் உள்ளனர். எங்கள் அடித்தளம் உறுதியாகவே இருக்கிறது. 

திமுகவில் இருந்தபோதே எம்.ஜி.அர் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து கருணாநிதியுடன் சண்டையிட்டார். ஜெயலலிதாவும் அதே வழியில்தான் சென்றார். சசிகலாவைத் தவிர குடும்பத்தில் யாரையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இனிமேல் கட்சியின் மீது எந்த ஒரு தனிப்பட்ட குடும்பமும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

click me!