எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்.. அமைச்சர் கருத்தால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை..!

By vinoth kumarFirst Published Sep 9, 2020, 6:11 PM IST
Highlights

எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். இதனால்,அதிமுகவில்  மீண்டும்  முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். இதனால்,அதிமுகவில்  மீண்டும்  முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. 

எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என அமைச்சர்கள் இடையே அண்மையில் மாறுபட்ட கருத்து எழுந்தது. சுகந்திர தினத்தன்று இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் மாறி மாறி ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அதிமுகவினர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

முன்னதாக தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு என துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்திருந்தார். இந்த நடவடிக்கைகளால் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அமைச்சர் கருப்பண்ணன் கருத்து மீண்டும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதத்தை தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கவுந்தப்பாடியில் ரூ.10 கோடி மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகளின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கோயம்பேட்டில் மட்டுமே குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் காற்று மாசு கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.

சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020 குறித்து முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். அந்த குழு ஆய்வு செய்து வழங்கும் அறிக்கையை பெற்று முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். அடுத்த சட்டமன்ற தேர்தலில்  அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

click me!