ஊரடங்கில் விவசாயிகளுக்கு குஷியான தகவல்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 17, 2020, 3:04 PM IST
Highlights

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச் செல்ல தடையில்லை, சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடையில்லை.  ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும். 

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். சேலம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழகத்திற்கு வந்துள்ள 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளும் மாநில அரசால் வாங்கப்பட்டது. மத்திய அரசு 12,000 கருவிகளை வழங்கவதாக கூறியுள்ளது. ஆனால், 50,000 கருவிள் தேவை என்று கேட்டுள்ளோம் என்றார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் அதிகம் பேர் குணமடைந்து வருகின்றனர். நோய் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

சேலத்தில் நோய் பரவலுக்கான 9 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நிர்வாகம் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சேலத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 150 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச் செல்ல தடையில்லை, சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடையில்லை.  ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும். கொரோனா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு விட்டது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

click me!