இதற்காகத்தான் சி.பி.ஐ சோதனையா? மாண்புமிகுக்களிடம் மனம் விட்டுக் குமுறிய எடப்படியார்!

By sathish kFirst Published Sep 11, 2018, 10:32 AM IST
Highlights

பா.ஜ.க முதுகில் குத்துகிறது! மூத்த அமைச்சர்களிடம் சீறிய எடப்பாடியார்! குட்கா விவகாரத்தில் அமைச்சர் மற்றும் டி.ஜி.பி வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தியதன் மூலம் நம் முதுகில் பா.ஜ.க குத்துவிட்டதாக மூத்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர் மற்றும் டி.ஜி.பி வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தியதன் மூலம் நம் முதுகில் பா.ஜ.க குத்துவிட்டதாக மூத்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிறன்று சென்னையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. 

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் தான் அதிகம் பேசியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேசியுள்ளார். ஆனால் அமைச்சரவை கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்கிற தகவல் குறித்து எந்த ஒரு அமைச்சரும் மூச்சு விட மறுக்கின்றனர்.

அதே சமயம் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது தான் தற்போது கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தான் முதலமைச்சருடனான தனி ஆலோசனையில் இருந்தவர்கள். செங்கோட்டையனுக்கு கூட இந்த தனி கூட்டத்திற்கு அழைப்பு இல்லை. ஜெயக்குமாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஏனென்றால் தற்போது மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் எஸ்.பி.வேலுமணி மற்றொருவர் தங்கமணி. இவர்கள் தான் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலம் போல் இருப்பவர்கள். சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் அ.தி.மு.க அரசின் அச்சாணிகளே இவர்கள் இருவரும் தான். 

எனவே தான் முதலில் இருந்தே பா.ஜ.க மற்றும் மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பி.எஸ் மற்றும் தற்போதைய ட்ரபுள் சூட்டர்கள் தங்கமணி மற்றும் வேலுமணியை மட்டும் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பேசியுள்ளார். 

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எந்த அளவிற்கு அனுசரணையாக செல்ல வேண்டுமோ? அந்த அளவிற்கு சென்றுவிட்டோம். அப்படி இருந்தும் சி.பி.ஐ வைத்து பா.ஜ.க அரசு நம் முதுகில் குத்திவிட்டது என்கிற ரீதியில் முதலமைச்சர் அவர்களிடம் பேசியுள்ளார். 

அதற்கு எதற்காக பா.ஜ.க இப்படி செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எங்களுடன் தொடர்பில் உள்ள பா.ஜ.க மேலிட தலைவர்களுக்கு கூட சி.பி.ஐ சோதனைக்கான பின்னணி தெரியவில்லை. ஒரு வேலை பா.ஜ.க தி.மு.கவுடன் நெருக்கம் காட்ட சி.பி.ஐயை பயன்படுத்தியிருக்கலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் கூறியதாக சொல்லப்படுகிறது.

கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் பேசிக் கொள்ளலாம் என்று பா.ஜ.க மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது, அப்படி இருந்தும் நம்மை தொந்தரவு செய்தால் தினகரனை எதிர்த்து எப்படி அ.தி.மு.கவை வழிநடத்திச் செல்ல முடியும் என்று ஓ.பி.எஸ்ஸை நோக்கி எடப்பாடி கேட்டுள்ளார். அதற்கு, பா.ஜ.கவின் அரசியல் எப்போதுமே இப்படித்தான் இருக்கும், நாம் சற்று பொறுமை காப்பது நல்லது என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

click me!