தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை.. எப்படி இருக்குமோ என பயந்தேன்.. எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumar  |  First Published Feb 23, 2023, 1:30 PM IST

இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  அதிமுக மூன்றாக போய்விட்டது, நான்காக போய்விட்டது என்றார்கள். ஆனால், இனி ஒன்றே ஒன்றுதான். 


திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மதுரை அருகே டி.குன்னத்தூரில் ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமத்துவ சமுதாய திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ்;- நான் நேற்றிலிருந்து கலங்கிப் போய் இருந்தேன். இன்று தீர்ப்பு வருகிறது என்று நேற்று இரவு செய்தி கிடைத்தது. இதனால் மனதில் அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரவில் தூக்கம் வரவில்லை. உதட்டில் தான் சிரிப்பு இருந்தது. உள்ளத்தில் இல்லை. 

Tap to resize

Latest Videos

undefined

காலை ஜெயலலிதா கோயிலுக்கு சென்று ஜெயலலிதா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த போது நல்ல தீர்ப்பு வேண்டும் என்று கேட்டேன். அங்கு இரு பெரும் தலைவர்களும் அருள் கொடுத்தார்கள். அடுத்து சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்தது. நம்முடைய தலைவர்கள் தெய்வ சக்தி மிக்க தலைவர்கள். மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது நடக்கும், வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. 

அதிமுக புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி பாதையிலேயே வழிநடத்த பாடுபடுவோம். அதிமுகவை எதிரிகளும், துரோகிகளும் சூழ்ந்து கொண்டு அழித்துவிட திட்டமிடுகிறார்கள். பாவம் அவர்கள் பகல் பகவு காணுகிறார்கள். அம்மா என்னும் பல்கலைக்கழகத்தில் பயின்று நாம் எதிரிகளையும், துரோகிகளையும் உறுதியுடன் எதிர்கொண்டு வீழ்த்தி வருகிறோம். தமிழக மக்கள் அதிமுக ஆட்சி மீண்டும் மலர காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 

இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திமுக ஆட்சி மக்களை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கிறது. நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முன் எப்போதும் இல்லாதத வகையில் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. டிடிவி. தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார். இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  அதிமுக மூன்றாக போய்விட்டது, நான்காக போய்விட்டது என்றார்கள். ஆனால், இனி ஒன்றே ஒன்றுதான். 

அதிமுக ஏழைகளுக்கான கட்சி, குடும்ப நலனிற்கான கட்சி அல்ல. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. அதிமுக புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஈரோட்டில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அளித்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றமே கூறிவிட்டதால் அதிமுக தலைமை குறித்து இனி எந்த கேள்வியும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் எழுச்சியுடன் அதிமுக தனது கட்சி பணிகளை ஆற்றும். அதிமுக நடத்திய சட்டப்போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இனி எழுச்சியோடு கட்சிப்பணிகள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

click me!