பாஜக தலைவர் அண்ணாமலையா? ஏழுமலையா? பாவம் எடப்பாடியாரே கன்பியூஸ் ஆயிட்டாரு போல.!

Published : May 31, 2022, 07:34 AM IST
பாஜக தலைவர் அண்ணாமலையா? ஏழுமலையா? பாவம் எடப்பாடியாரே கன்பியூஸ் ஆயிட்டாரு போல.!

சுருக்கம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலை என்பதற்குப் பதிலாக ஏழுமலை என்று உளறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலை என்பதற்குப் பதிலாக ஏழுமலை என்று உளறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. திமுக வேட்பாளர்களான கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரமும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்த பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்பதற்கு பதிலாக ஏழுமலை என மாற்றி  எடப்பாடி பழனிச்சாமி பேசினார். உடனே சுதாரித்து அருகில் இருந்தவர்கள் அண்ணாமலை என சொல்ல எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை என்றார். எடப்பாடியின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!