யார் இந்த தினகரன், கட்சிக்கு உழைத்தவரா? சிறைக்குச் சென்றவரா? மயிலாடுதுறையில் மரணபங்கம் பண்ணிய எடப்பாடியார்!?

 
Published : Jun 19, 2018, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
யார் இந்த தினகரன், கட்சிக்கு உழைத்தவரா? சிறைக்குச் சென்றவரா? மயிலாடுதுறையில் மரணபங்கம் பண்ணிய எடப்பாடியார்!?

சுருக்கம்

who is dinakaran Edappadi palanisamy ask question

"தினகரன் யார், கட்சிக்கு உழைத்தவரா? சிறைக்குச் சென்றவரா? அவர் எதையுமே செய்யவில்லை. ஒருவருக்குச் சொந்தக்காரர் என்ற நிலைதான் அவருக்கு இருந்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  நேற்று மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவரை கடுமையாக விமர்சித்து பேசினார். தொடர்ந்துப் பேசிய அவர் தினகரனையும் தாறுமாறாக தாளித்துத் தள்ளினார் எடப்பாடியார்.

இதில், "தினகரன் யார், கட்சிக்கு உழைத்தவரா? சிறைக்குச் சென்றவரா? அவர் எதையுமே செய்யவில்லை. ஒருவருக்குச் சொந்தக்காரர் என்ற நிலைதான் அவருக்கு இருந்தது. அதை வைத்துக்கொண்டு எவ்வளவு ஆட்டம் காண்பித்தார். ஆனால், இன்றைய நிலை அப்படியல்ல, கட்சிக்காரர்கள் சுதந்திரமாக உள்ளனர். என்னைப் போல ஆயிரம் பழனிசாமி அதிமுகவில் உருவாக முடியும்" என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு