
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு மூன்றாம் நீதிபதியாக விமலா விசாரிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடியே நேரடியாக 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் தானே போன் போட்டு, தன் பக்கம் வருமாறு பேசியிருக்கிறார். எடப்பாடியின் இந்த செயலால் தினகரன் பயங்கர அப்சட்டில் உள்ளாராம்.
நேற்று காவிரி தொடர்பான பொதுக்கூட்டத்துக்காக சென்ற எடப்பாடி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடியே “தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் இணைவதாகப் சொல்வது பற்றி தனக்கு ஏதுமே தெரியாதது போல் முதல்வர் திருச்சியில் கூறினாலும், நேற்று காலையிலேயே 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் தானே போன் போட்டுப் பேசியிருக்கிறாராம் முதல்வர்.
ஏற்கனவே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் பேசி தன்பக்கம் வளைக்கச் சொல்லி நம்பிக்கையான அமைச்சர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் முதல்வர். ஆனால், அமைச்சர்களின் முயற்சிக்கு எந்தவிதமான ரியாக்ஷனும் இல்லை. இந்நிலையில், ஜூன் 14ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் ஆண்டிபட்டி தங்கம், தகுதிநீக்கத்தை எதிர்த்து தான் போட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, நேற்று எடப்பாடி பழனிசாமி தானே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு போன் போட்டிருக்கிறார். ‘நான் தான் முதல்வர் பேசுறேன். நல்லா இருக்கீங்களான்னே?’ என்று கேட்டு சில எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய முதல்வர், ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அனைத்தும் சிறப்பாகச் செய்து தரேன். நீங்க நம்ம பக்கம் வந்துடுங்க’ என உருக்கமாக பேசினாராம். ஆனால், சில MLAக்கள் பதிலே பேசாமல் போனை துண்டித்துள்ளனர். 18 பேருக்கும் முதல்வர் இப்படி தனித்தனியாக போன் பேசியது நேற்று மாலையே தினகரனுக்குத் தெரியவர, மூடு அப்செட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.