எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார் என ஓபிஎஸ் ஆவேசமாக பேசினார்.
மறுபடியும் எனக்கு முதலமைச்சராகவோ, பொதுச்செயலாளராகவோ இருக்க விருப்பம் இல்லை. உங்களில் ஒருவராக, தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
திருச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது, பேசிய ஓபிஎஸ்;- அதிமுக கட்சியின் ஆணிவேராக இருக்கக்கூடிய தொண்டர்கள்தான் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சட்ட ரீதியிலான உரிமையை எம்ஜிஆர் வழங்கினார். அவருக்குப் பின் வந்த ஜெயலலிதாவும் அதை உறுதிபடுத்தினார்.
இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ்-ன் வழக்கு... ஜூன்.8 தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!!
எம்ஜிஆர் மறைவின்போது 16 லட்சம் தொண்டர்களுடன் இருந்த இக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, 30 ஆண்டுகள் வேதனைகள், சோதனைகளைத் தாங்கி கொண்டு எதிர்கட்சிகளை சமாளித்து 1.5 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றினார். எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டவிதியை ஜெயலலிதா கண்ணாக பாதுகாத்தார். கடந்த 50 ஆண்டுகளாக, இந்த சட்ட விதிகளின்படியே கட்சியை வழிநடத்தி 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யும் உரிமையை மக்களிடத்திலிருந்து பெற்றனர். அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பெருமையைப் பெற்ற ஒரே கட்சி அதிமுகதான்.
தொண்டர்கள்தான் கட்சியின் உயிர்நாடி, கட்சியின் ஆணிவேர் எனக் கருதினார். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வழிநடத்தினார். அவரைத்தான், கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று உண்மையான பொதுக்குழுவில் நாம் தீர்மானம் நிறைவேற்றினோம். கழக விதிகளை மாற்றி அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய கபட வேடதாரி, அரசியல் வியாபாரி, நயவஞ்சக துரோகி எடப்பாடி பழனிசாமி. இந்த கல் நெஞ்சக்காரர்களை ஓட, ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
13 ஆண்டுகாலம் நான் கழகத்தின்பொருளாளராக இருந்தேன். நான் பொருளாளர் பதவியை ஏற்ற காலத்தில் ரூ.2 கோடியாக கட்சி நிதி இருந்தது. அதனை அம்மாவின் உதவியுடன் ரூ.256 கோடி ரூபாயாக உயர்த்தினேன். அதிமுக வங்கி கணக்கில் உள்ள நிதியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அதிமுக கட்சி நிதியை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார் என ஓபிஎஸ் ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமி மாபெரும் துரோகி... திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் அணல் பறக்கும் பேச்சு!!
மேலும், ஜெயக்குமார், அது ஒரு லூசு. அது சொல்லுது, பன்னீர்செல்வம் தனியா நின்று டீ ஆத்திக் கொண்டு இருக்கிறார் என்று. இப்போது பார்த்தாயா எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று. இப்போது கூடியிருப்பது 33 மாவட்ட தொண்டர்கள் தான். இன்னும் 55 மாவட்டங்கள் இருக்கிறது. அந்த மாவட்டங்களில் நிச்சயம் மாநாடு நடத்தப்படும் என்றார்.