8 மாசத்துல தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவரா போச்சி.. தலையில் அடித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.

By Ezhilarasan BabuFirst Published Jan 5, 2022, 1:27 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்த எட்டு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ரவுடியிசம் அராஜகம் தலைதூக்க தொடங்கிவிட்டது. ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ரவுடியிசம் அராஜகம் தலைதூக்க தொடங்கிவிட்டது. 

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அம்மா கிளினிக் மூடப்பட்டது மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்படும் ரெய்டு உள்ளிட்டவை கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் அவர் இவ்வாறு கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரிதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம், மழை வெள்ளத்தின் போது அரசு எடுத்த துரித நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒருபுறமிருக்க எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தொடர்ந்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அதிமுக விமர்சித்து வருகிறது. அதாவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், காவல்துறை அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்றும், முன்னாள் அமைச்சர்கள் மீது காழ்ப் புணர்ச்சிகாரணமாக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை கையில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றும் விமர்சித்து வருகிறது.

அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை மீதான மாநில வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் அதை குறைக்காமல் இருந்து வருகிறது, உடனே அதை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. மேலும் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அதுபோன்று எதையும் திமுக செய்யவில்லை என்றும், பொய் வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்து விட்டது என்றும் அதிமுக குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அம்மா கிளினிக் மூடப்பட்டது மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் ரெய்டுகளை கண்டித்து அதிமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சிக்கு வந்த எட்டு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ரவுடியிசம் அராஜகம் தலைதூக்க தொடங்கிவிட்டது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லவே இல்லை, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் சட்ட ஒழுங்கில் கவனம் செலுத்தவேயில்லை. தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கஞ்சா, குட்கா, போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து டன் கணக்கில் தமிழகத்திற்கு குட்கா கொண்டு வரப்படுகிறது. இளைஞர்கள் போதை பொருட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
 

click me!