முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.. அரசியல் நாகரீகம்.

Published : May 03, 2021, 11:32 AM IST
முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.. அரசியல் நாகரீகம்.

சுருக்கம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார். 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது.  234 தொகுதிகளிலும் நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அதில் ஆரம்பம் முதல் இருந்தே திமுக கூட்டசி முன்னணியில் இருந்து வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இறுதியில் சுமார் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி தேர்தலில் வெற்றி கண்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து திமுக, ஆளுங்கட்சியாக மாறியுள்ளது. துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் என பல பதவிகளை வகித்த திமுக தலைவர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதேபோல் வலுவான எதிர்க் கட்சியாக அதிமுக அமைந்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில்  முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக் கூறியுள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அதே போல எடப்பாடி பழனிச்சாமி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?