தோற்றாலும் கெத்து... லிஸ்டில் திமுகவினருக்கு மத்தியில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமி..!

Published : May 03, 2021, 11:14 AM IST
தோற்றாலும் கெத்து... லிஸ்டில் திமுகவினருக்கு மத்தியில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமி..!

சுருக்கம்

5 பேர் கொண்ட லிஸ்டில் 4 பேரும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்கள் வரை பிடித்து ஆட்சி அமைக்க உள்ளது. வரும் ஏழாம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி மிக அதிகபட்சமாக 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து நின்ற ஒருவருக்கும் டெபாசிட் கிடைக்காமல் வெற்றி பெற்றார். அந்த பட்டியலில் ஐ.பெரியசாமி முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் எ.வ.வேலுவும் மூன்றாவது இடத்தில் எடப்பாடி பழனிசாமி, அடுத்து கே.என்.நேரு, ஐந்தாவது இடத்தில் மு.க.ஸ்டாலினும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 5 பேர் கொண்ட லிஸ்டில் 4 பேரும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!