இதுக்குத்தான் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி ! தமிழகத்தில் நடக்கப் போகும் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jun 12, 2019, 8:00 PM IST
Highlights

ஒற்றைத் தலைமை என்ற சலசலப்பு அதிமுகவை அதிர வைத்துக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான அரசியல் சூழல்நிலையில் டெல்லி சென்று திருப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சந்தித்துப் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குநித்த விவரம் தற்போது வெளிவந்துள்ளது.
 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வாரம்  டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமித் ஷா ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் தற்போதைய சூழல்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின்பு தமிழகம் நேற்று திரும்பினார்.

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள்  நடந்த இந்த சந்திப்பில் சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 

அதுபோலவே தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரின் பதவிக் காலம் விரைவில் முடியவுள்ள சூழலில் அதுதொடர்பாகவும் விவாதித்திருக்கிறார்கள்.

ஆனால் எல்லாவற்றியும் விட முக்கியமானது  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள  7 பேர் விடுதலை தொடர்பாகவும் ஆலோனை நடத்தியதாக தெரிகிறது.  எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் குறித்து ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. 

இதுதொடர்பாக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்மானத்தில் நிலை குறித்து இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு ஜூன் 3ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில் எழுவர் விடுதலையை காலம் தாழ்த்தக் கூடாது என்று ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 7 பேரும் விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது. 

click me!