முதல்வர் எடப்பாடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை - ஜெ.மரணம் குறித்து முக்கிய அறிவிப்பு?

Asianet News Tamil  
Published : Aug 17, 2017, 04:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
முதல்வர் எடப்பாடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை - ஜெ.மரணம் குறித்து முக்கிய அறிவிப்பு?

சுருக்கம்

edappadi meeting with ministers

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சகர்களுடன் தலைமைசெயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஜெயலலிதா மரணம் மற்றும் அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.

அவருக்கு  12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மீதம் உள்ள 123 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை.

மத்திய பாஜகவோ இரு அணிகளும் இணைய வேண்டும் என வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. இதனிடையே இரு அணிகளும் விரைவில் இணையும் என இரு தரப்பும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சகர்களுடன் தலைமைசெயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஜெயலலிதா மரணம் மற்றும் அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!