
மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க கிடைத்த வெற்றியாகவே உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பார்ப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்ட வரைவை மத்திய அரசிடம் அளித்தது. இந்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தமிழக அரசு அவசர சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் மாதிக்கப்படுவார்கள் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தொடர்பான அவசர சட்டத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது எனவும் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாததால் ஒப்புதல் வழங்கப்பட்டது எனவும் உச்சநீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.
மேலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க கிடைத்த வெற்றியாகவே உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், மாநில அரசு தனது அதிகார வரம்பில் செயல்படுவதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர் முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு சட்ட வரைவுக்கு 3 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது நம்பிக்கை அளிப்பதாகவும், மாணவர்களின் நலன்களுக்காகவே நீட் தேர்வில் இருந்து விலக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.