"தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்" – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Asianet News Tamil  
Published : Mar 05, 2017, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
"தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்" – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சுருக்கம்

Across the border in the past two days trapped in fishing saying for fishermen by Sri Lankan Navy

கடந்த இரண்டு தினங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.

15 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் இரண்டு விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று ஜனதாபட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருவதால் தமிழக மீனவர்கள் பெரும் கோவத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுவரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 136 விசை படகுகளை அரசு தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது :

கடந்த இரண்டு நாட்களில் சிறை பிடிக்கப்பட்ட 32 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களின் நிலைபாட்டை உயர்த்த கச்சத்தீவினை மீட்க வேண்டும்

மீனவர்கள் மீதான தாக்குதல் பெரும் கவலையை தருகிறது.

கச்சத்தீவு திருவிழா நெருங்கும்போது மீனவர்கள் சிறைபிடிக்கபடுவது மிகவும் வேதனையை தருகிறது.

பாக் நீரினை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்ததற்கான ஆதாரங்களை இலங்கை அரசு நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள 53 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!