தேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

By Asianet TamilFirst Published Oct 13, 2019, 10:50 PM IST
Highlights

மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல், பதவிக்காகவே  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வசந்தகுமார் போட்டியிட்டு எம்.பி.யாகி உள்ளார். வசந்தகுமாரின் பேராசை காரணமாக நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில்   அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணன் வெற்றி பெற்றால், அவரை எளிதாக அணுக முடியும். 

இடைத்தேர்தல் நடக்கும்போதுதான்  திண்ணை ஞாபகமே வருகிறது. மக்கள் பிரச்சனைகளை எல்லாம் கேட்டு மு.க. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ரெட்டியார்பட்டி என்ற இடத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இந்தத் தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமார் வெற்றி பெற்றார். ஆனால், மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல், பதவிக்காகவே  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வசந்தகுமார் போட்டியிட்டு எம்.பி.யாகி உள்ளார். வசந்தகுமாரின் பேராசை காரணமாக நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில்   அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணன் வெற்றி பெற்றால், அவரை எளிதாக அணுக முடியும். ஆனால், காங்கிரஸ் வேட்பாளரோ கோடீஸ்வரர். அவரை யாரும் அணுகவே முடியாது.
எனவே யாரை தேர்வு செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை நாங்குநேரி இத்தொகுதி மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்குநேரி தொகுதிக்கு  நன்மை செய்யக்கூடிய வேட்பாளர் வேண்டுமா அல்லது வெளியூர் வேட்பாளர் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். நாங்குநேரியில் எதிர்க்கட்சித் தலைவர் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு இடைத்தேர்தல் நடக்கும்போதுதான்  திண்ணை ஞாபகமே வருகிறது. மக்கள் பிரச்சனைகளை எல்லாம் கேட்டு மு.க. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்? மக்களிடம் மனுக்களையெல்லாம் வாங்கி யாரிடம் கொடுக்கப் போகிறார்?.
 நாங்குநேரி தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால், இத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். இந்தத் தொகுதியை மறந்த காங்கிரஸுக்கு  அதிமுக வெற்றி மூலம் பாடம் புகட்ட வேண்டும்.” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 

click me!