திமுகவுடன் சேர்ந்து ஓ.பி.எஸை அசிங்கப்படுத்துகிறார் எடப்பாடி... மாரிதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Nov 25, 2019, 6:05 PM IST
Highlights

குழப்பத்தை உண்டாக்கத் துடிக்கிறது திமுக, இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ், குருமூர்த்தி இருவரது உறவில் விரிசல் உருவாக்க ஒரு கூட்டம் கூச்சல் போடுவதாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், ‘’குருமூர்த்தி சார் துக்ளக் விழாவில் பேசிய வார்த்தை என்ன? சசிகலா அவர்களை முதலமைச்சராக ஆக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டார்கள். அந்த யுனிவெர்சிட்டி ஹாலில் எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஓ.பி.எஸ் கூப்பிட்டு அங்கே சூப்பர்வைஸ் பண்ணி கொஞ்சம் துப்புரவா இருக்கா பாருங்கள் என்று சொன்ன பிறகு - அவர் என்னிடம் வந்தார் "சார் இந்த மாதிரி எல்லாம் பண்றங்களே எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொன்னார் ஓ.பி.எஸ். நான் அவரிடம் பேசிய முறையை வெளியில் கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளயா ஏன் இருக்கேங்க என்று எனக்குத் தெரியவில்லை என்றேன். என்ன சார் பண்ண வேண்டும் என்று கேட்டார் ஓ.பிஎஸ்.

இது தான் அவர் அந்த வார்த்தையை பயன்படுத்தும் முன் பேசிய வார்த்தைகள். இதில் துப்புரவு வேலை பார்க்க சொன்ன அதுவும் முதலமைச்சராக இருப்பவரை துப்புரவு வேலை பார்க்கச் சொன்னால் கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாத செயல். தொடர்ந்து அவமானப்படுத்தி அடிமைகளாக இருந்த அதிமுக இதை விட அவமானம் என்ன எதிர் கொள்ள முடியும்?

என்ற வகையில் "ஆம்பளையாக ஏன் இருக்கேங்க" என்ற கோபம் வரத்தானே செய்யும். எதிர்த்து நிற்க அன்று எவருக்கும் துணிவில்லாத நிலையில் , பத்திரிக்கைகள் கூட சசிகலா அவர்களை எதிர்க்கத் துணிவில்லாத நிலையில் சசிகலாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது என்பதைக் குருமூர்த்தி சார் தெளிவுபடுத்த அதைக் கூறியுள்ளார்.

சசிகலா அவர்களை எதிர்க்கவில்லை என்றால் ? அதைத் தொடர்ந்து குருமூர்த்தி சார் சொன்னது "அவர் மௌனமாகச் சமாதியில் சென்று அமர்ந்தார், 45 நிமிடம் அவர் அமைதியாகச் சமாதியில் உட்கார்ந்ததும் மொத்த தமிழகமும் மாறியது. காரணம் மாறுவதற்குத் தமிழகம் தயாராக இருந்தது. அதற்காக ஒருவர் மௌனமாக அமர்ந்தார் அதை வைத்து மாறியது.

எந்த தன்மானமுள்ள நபருக்கு ஒரு முதல்வரை துப்புரவு பணிகள் சரியாக வேலை நடக்கிறதா என்று சசிகலா வேலை ஏவினால் கோபம் வருது தான் இயல்பு. சசிகலா அவர்கள் நடத்திய விதத்தால் ஓ.பி.எஸ் கொண்ட மனவருத்தம், குருமூர்த்தி அவர்கள் கொண்ட கோபம் இதனைத் தான் தொடர்ந்து நடந்த அரசியல் மாற்றம் என்பதாக ஒரு தகவலை பகிர்ந்தார்.

இதனை தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது ஒரு கூட்டம். எனக்குத் தெரிந்து துக்ளக் விழாவில் குருமூர்த்தி சார் தவறாக எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. எதிர்த் தரப்பில் குழப்பத்தை உண்டாக்கத் துடிக்கிறது திமுக, இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ், குருமூர்த்தி இருவரது உறவில் விரிசல் உருவாக்க ஒரு கூட்டம் கூச்சல் போடுவதாகவே நான் கருதுகிறேன்.

இங்கே விசித்திரம் என்னவென்றால் ஓ.பி.எஸ்.நீங்க ஆம்பளையா என்று ட்ரெண்ட் செய்ய துடிக்கிறார்கள் திமுக நிர்வாகிகள். ஒருவேலை இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக பாலியல் குற்றவாளியா ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்தால் ஏற்பார்களா? மாஃபா பாண்டியராஜனை மாமா பாண்டிய ராஜன் என்று ட்ரெண்ட் செய்வர், துணை முதல்வர் ஓபிஎஸை ஆம்பளயா என்று ட்ரெண்ட் செய்வர். பதிலுக்கு பாலியல் குற்றவாளி ஸ்டாலின் என்று அவர்கள் தரத்திற்கு இறங்கி பதில் கொடுத்தால் கொலை மிரட்டல் விடுவர்.

தமிழகத்தில் அனைத்து தரம் தாழ்ந்த அரசியலும் செய்யும் திமுக தன்னை எதிர்த்தால் மட்டும் யோக்கியவான் போல் அரசியல் நாகரீகம் பேசுவர். ஆக ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் குருமூர்த்தி சார் கேட்டதைத் திரித்துப் பரப்புவது தவறு’’என அவர் தெரிவித்துள்ளார்.

click me!