ஜெ., நினைவிடம் செல்கின்றனர் முதல்வர் - துணை முதல்வர்!

 
Published : Nov 23, 2017, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
ஜெ., நினைவிடம் செல்கின்றனர் முதல்வர் - துணை முதல்வர்!

சுருக்கம்

Edappadi Jayalalitha goes to the memory

இரட்டை இலை சின்னம், எடப்பாடி-பன்னீர் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. 

அப்போது, சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ் க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிலையில், அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது இரட்டை இலை சின்னமும் கட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எடப்பாடி - பன்னீர் தரப்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 

எடப்பாடி-பன்னீர் அணிக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளதில் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்காக தற்போது பெரும்பாலான தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு ஸ்வீட் கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!