கடைசி இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி !! கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam PFirst Published Mar 23, 2019, 8:16 AM IST
Highlights

ந்தியாவில் மாநில முதலமைச்சர்களின்  செயல்பாடு குறித்து வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழக முதலமைச்சர்  எடப்பாடி  பழனிசாமிக்கு கடைசி இடமும் , தெலங்கானா முதலமைச்சர்  கே.சந்திரசேகர் ராவுக்கு முதலிடமும் கிடைத்துள்ளது.
 

இந்தியாவில் உள்ள மாநில முதலமைச்சர்களின்  செய்லபாடுகள்  குறித்து ஒவ்வொரு மாநில மக்களிடம் 'சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ்' செய்தி நிறுவனம் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் நாட்டில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் செயல்பாட்டில் தெலங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர் ராவ் செயல்பாடு சிறப்பாகவும், மனநிறைவு அளிப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்து அவருக்கு முதலிடம் அளித்துள்ளனர்.


 
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 68.3 சதவீதம் பேர் சந்திரசேகர் ராவ் நிர்வாகம், செயல்பாடு மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். சந்திரசேகர் ராவின் செயல்பாட்டில் ஒட்டுமொத்த நிகர மனநிறைவு வீதம் 79.2 சதவீதமாக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் 2-வது இடத்திலும் ஒடிசா முதலமைச்சர்  நவீன் பட்நாயக் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து டெல்லி முலமைச்சர்  அரவிந்த் கேஜ்ரிவால் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.  கர்நாடகாவின் முதலமைச்சர்  குமாரசாமி 5-வது இடத்திலும், பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் 6-வது இடத்திலும் உள்ளனர்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயனசாமி, தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, உத்தரப் பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் ஆகியோரின் செயல்பாட்டில் மனநிறைவு இல்லை என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக்குறைந்த அளவு மனநிறைவு அளிக்கும் வகையில் செயல்பட்ட முதலமைச்சர்  வரிசையில் தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி  இடத்தை வாக்காளர்கள் வழங்கியுள்ளனர். 

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 42 சதவீதம் பேர், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக செயல்படுவது அந்த கட்சிக்கு சிறப்பானதாக இருக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  11-வது இடத்தில் மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி உள்ளார்.

click me!