
2 மாதங்கள் பொறுத்திருந்து அதிமுக செயல்பாடுகளை கவனிப்போம் எனவும் அப்போதும் கட்சியில் பலவீனம் இருந்தால் கட்சி பணியில் நான் ஈடுபடுவேன் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் 2 மாதத்திற்கு பிரச்சனை இல்லை என எடப்பாடி ஆதரவாளர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவின் நிலைமை ரணகொடூரமாக மாறிக்கொண்டு வருகிறது. யார் யாருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள் என்றே கணிக்க முடியாத நிலை தொடர்கிறது.
திடீர் திடீர்னு உடையுதாம், திடீர் திடீர்னு விழுவுதாம்... அப்டிங்கற கதைதான் அதிமுகவில் நிலவி வருகிறது. ஜெ மறைவிற்கு பிறகு சசிகலா பதவியை கைப்பற்ற நினைத்ததால் ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
இதனால் அதிமுக இரு அணியாக பிரிந்தது. தொடர்ந்து செத்தும் கெடுத்தான் செவந்தியப்பன் என்ற கதை போல சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லும் முன் டிடிவியை துணைப்பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிச்சாமியை முதல் நிலை வேட்பாளராகவும் தேர்வு செய்து விட்டு சென்றார்.
அதில் ஆரம்பித்தது இருவருக்கும் தலைவலி சசிகலா பதவி ஆசையில் என்ன வேகத்தில் சந்திரமுகியாக மாறி சிறைக்கு சென்றார்களோ அதே ஆசையில் அதே வேகத்தில் டிடிவியும் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைக்கு சென்றார்.
இதனிடையே முதலமைச்சரான எடப்பாடி ஒ.பி.எஸ்சுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை வலுப்படுத்தி கொள்ளவேண்டும் என திட்டமிட்டார். அதற்கு அமைச்சர்களையே தூதுவிட்டார். டிடிவிக்கும் அதிமுகவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர்கள் அறிவித்தனர்.
ஆனால் சசிகலா குடும்பத்தை முழுவதுமாக விலக்கி வைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதையடுத்து நேற்று ஜாமினில் இருந்து வெளியே வந்த தினகரன், கட்சி பணியில் தொடருவேன் என தெரிவித்தார்.
இதைகேட்ட அமைச்சர்கள் அதிர்ச்சியுற்று பழைய குருடி கதவ திறடி என்பது போல் தினகரன் ஆரம்பிக்கிறார் என கூறி ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் ஒரு முடிவை எடுத்துவிட்டு முதலமைச்சரை நோக்கி சென்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதாக தெரிகிறது. எடப்பாடியும் ஆட்சி நிலைத்தால் போதும் என்ற நோக்கில் தலையசைத்துள்ளார்.
உடனே செய்தியாளர்களை நோக்கி வந்த அமைச்சர்கள், தினகரன் கூறியவாறு விலகி இருந்தால் நல்லது. அதிமுகவுக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளோம். என கருத்துக்களை அள்ளி வீசினார்.
சசிகலாவை சிறையில் சந்தித்துவிட்டு வெளியே வந்த தினகரனுக்கு தகவல் தெரிய கொதித்தெழுந்து விட்டார். ஜெயக்குமாருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. அவர் பொதுச்செயலாளர் போல் செயல்படுகிறார். நான் இன்னும் 2 மாதகாலம் அதிமுகவை கவனித்து வருவேன். அப்போதும் அதிமுகவில் பலவீனம் இருந்தால் கட்சி பணியில் ஈடுபடுவேன். என டிடிவி தெரிவித்தார்.
இதை கேட்ட எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் இன்னும் 2 மாதத்திற்கு டிடிவி பிரச்சனை ஓவர் என பெருமூச்சு விட்டனர்.