
ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டதால் டிவி விவாதங்களில் பங்கேற்று வந்த பேராசிரியர் தீரன் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
சரி இப்போ பேரா தீரன் யார்? அவரோட பழைய ஹிஸ்டரி எப்படி?
இப்போது தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக அதிமுகவில் ஆட்டம் காட்டிவந்த பேராசிரியர் தீரன் கடந்த காலங்களில் கட்சி விட்டு கட்சி மாறி எந்த கட்சில் இப்போ இருக்கிறீர்கள் என கேட்கும் அளவிற்கு கொடிகட்டி பறந்தவர். முதலில் பாமகவில் சேர்ந்த தீரன் கொஞ்சம் காலம் கூட தாக்கு பிடிக்காமல், தனிக்கட்சி தொடங்கினார், கட்சியில் யாரும் சேராததால் (தான் தொடங்கிய கட்சியின் பெயரை இப்போது கேட்டாலும் அவருக்கே தெரியாது) பாவம் மறந்து போயிருப்பார். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சிக்கு போனார் அங்கும் அவர் பருப்பு வேகாததால் அங்கிருந்து பறந்து வந்த அவர் பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஐக்கியமானார். அங்கும் தன் வேலையே காட்டினார். ஆனால் வேல்முருகனிடம் பாட்சா பலிக்காததால் அதிமுகவுக்கு தாவி டிவி விவாதங்களில் பங்கேற்று வந்தார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின், பன்னீர் சசிகலா டீம் டீமாக பிரிந்தபோது, சசிகலா கேங்’கில் இருந்த தீரன், பிறகு தினகரன் தனியாகப் போன போதும் கூட எடப்பாடியார் அணியில் இருந்த அவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
என்னதான் ஆனால், டிவி விவாதங்களில் பேசும்போது, தினகரன் இன்னமும் அதிமுகவின் ஒரு அங்கம் என்பதைப் போலவும் சசிகலா தொடர்பாக மென்மையாகவே கருத்துகளையும் வைத்து வந்தார். காரணம், எப்படியும் எடப்பாடி சசிகலா குடும்பத்தோடு செந்துவிட்டால் நம் கதி அதோகதி ஆகிவிடும் என்பதால் தினகரனை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா புகழ்ந்த நிலையில், இது எடப்பாடியார் & பன்னீரை கடும் கடுப்பை வர வைத்ததுள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாக டென்ஷனில் இருந்த முன்னர் பேராசிரியர் தீரனை அழைத்த மேற்கு மாவட்ட அமைச்சர்கள் செம டோஸ் விட்டது மட்டுமல்லாமல், இனிமேல் தினகரனை பற்றி ஏதாவது புகழ்ந்து பேசினால் அதிமுகவில் இருக்கமுடியாது என எச்சற்றித்து அனுப்பியுள்ள நிலையில் தீரன் தற்போது அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக தீவிரமாக செயல்பட்டதால் தற்போது தீரன் அதிமுகவை விட்டு நீக்கிவிட்டதாக் தகவல்கள் கிடைத்தது.
நேற்று வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்ளைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறியதாலும் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன் இன்று முதல் கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பிறப்பித்துள்ளனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்ற நாள் முதல் அவரது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிரடியாக நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அதான் மேற்கு மாவட்ட அமைச்சர்கள் செம டோஸ் விட்டாரே என்னவாம்? அப்புறம் எதற்கு? அது என்னன்னா சில நாட்களுக்கு முன் டிவி விவாதம் ஒன்றில், அதிமுகவை தினகரனும் ஆட்சியை ஈபிஎஸ்ஸும் நடத்தலாம் என பகிரங்கமாக பேசியதால் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியடைந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுசூதனன் கடிதம் ஒன்றை எழுதி எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார். குடிநீர் வடிகால் வாரியம் தலைவர் பதவிகேட்டு கேபி முனுசாமி நெருக்கடி இப்படி ஆளுக்கு ஆள் போர்க்கொடி தூக்கி பயத்தை காட்டிவரும் இந்த நேரத்தில் எடப்பாடியாரும் பன்னீரும் ஸ்லீப்பர் செல்களை களை எடுக்காமல், பாவம் கட்சிவிட்டு கட்சி மாறி ஆட்டம் காட்டி கொண்டிருந்த இந்த சின்ன புழுவை தூக்கி அடித்துள்ளனர்.