முதல்வரின் பிரச்சாரத்தில் முக்கிய 3 பாயிண்ட்..! ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்..!

By ezhil mozhiFirst Published Apr 2, 2019, 12:51 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சொன்ன மாதிரியே அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்து விட்டனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சொன்ன மாதிரியே அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்து விட்டனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் வர இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கார சார பிரச்சார பணியில் ஓய்வே இல்லாமல் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அவர்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல முக்கிய கருத்துக்களை மக்களுக்கு நினைவுபடுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜா விற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி நேற்று திருப்பத்தூரில் பிரச்சார உரை நிகழ்த்தினார்.

அப்போது சிலமுக்கிய கருத்துக்களை முன் வைத்து எதிர்க்கட்சியை தாறுமாறாக தாக்கி பேசினார். அதன் படி, "வரும் தேர்தலில் அதிமுக 39 தொகுதியிலும் வெற்றி பெறுவது உறுதி...எங்கள் கூட்டணி மெகா  கூட்டணி, திருப்பத்தூரை சேர்ந்த சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும்.. அதிமுகவின் வெற்றி வாய்ப்பை கண்டு ஸ்டாலின் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி வருகிறார். நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க  வேண்டுமென்றால் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்..எதிர்க்கட்சிகள் நிறைவேற்ற முடியாத திட்டத்தை ஜோடித்து வெளியிட்டு உள்ளது. ஆனால், அதிமுக அவ்வாறு இல்லை என்பதை உணர வேண்டும்.

நினைவிருக்கிறதா..? 

மறைந்த  கருணாநிதி அவர்கள், நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக சொல்லி இருந்தார்.கொடுத்தாரா..? இதை யாரும் மறக்க கூடாது. ஆனால், அதிமுக 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்...

சிவகங்கை தொகுதியை சேர்ந்தவர் தான் ப.சிதம்பரம். மத்தியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தவர். ஆனால் தமிழகத்திற்கும் சிவகங்கை தொகுதிக்கும் ஒரு இம்மி அளவுக்கு கூட நல்லது செய்ய வில்லை என பாயிண்டை புட்டு புட்டு வைத்து பேசி வருகிறார் முதல்வர் பழனிசாமி. திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி எப்படி ஆதிக்கம் செலுத்தி வருகிறாரோ அதே போன்று தான் சிதம்பரத்தின் மகனும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என எதிர்க்கட்சியை சாடி உள்ளார்.

ஸ்டாலின் என்னை மண்புழு என விமர்சனம் செய்கிறார், நான் மண்புழுவாக நல்ல உரமாக இருந்து விவசாயிகளுக்கு தோழனாக இருப்பேன் என பதிலடி கொடுத்து உள்ளார் முதல்வர் பழனிசாமி

click me!