திமுகவில் மரியாதையை எதிர்பார்க்க முடியாது… எடப்பாடி பழனிசாமி சாடல்!!

Published : Sep 07, 2022, 11:53 PM IST
திமுகவில் மரியாதையை எதிர்பார்க்க முடியாது… எடப்பாடி பழனிசாமி சாடல்!!

சுருக்கம்

திமுகவில் மரியாதையை எதிர்பார்க்க முடியாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். 

திமுகவில் மரியாதையை எதிர்பார்க்க முடியாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் 10 எம்எல்ஏக்கள் எங்களோடு பேசி வருகின்றனர். மேயரை பின் வரிசையில் அமர வைத்தது தான் திராவிட மாடல். திமுக என்பது திராவிட மாடல் மட்டுமல்ல. கார்ப்பரேட் கட்சி, குடும்ப கட்சி. வெறும் எம்எல்ஏ-வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களை தொடங்கி வைத்து முன்னிலைப்படுத்தப்படுகிறார். உரிய மரியாதை அளிக்க வேண்டியவர்கள் பலர் அங்கு உள்ளனர். ஆனால் அதையெல்லாம் திமுகவில் எதிர்பார்க்க முடியாது. புதிய மின் மசோதா குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு பாதிப்பா என்பது குறித்த கருத்தை தெரிவிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிவிப்பு வந்தால் வெற்றி வாய்ப்பு குறித்து தெரிவிக்கிறோம்.

இதையும் படிங்க: இது கொடநாடு பிரச்சனையா? அந்த 47 நாட்கள்.. எடப்பாடி, CV சண்முகத்துக்கு தெரியும்.. போட்டு உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்

தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் பாசம் உள்ள கட்சி அதிமுக மட்டுமே. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். அதிமுக என்பது தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. தொண்டர்கள் தான் இதை ஆட்சி செய்து வருகின்றனர். மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை முடிவிலேயே அது குறித்து தெரியவரும். அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்ட சிபிசிஐடி விசாரணை என்பது, காலம் தாழ்ந்து தொடங்கப்பட்ட விசாரணை. கட்சி தலைமையகத்தில் பொருட்கள் திருடு போனதாக புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஆட்சியில் அது நடைபெறாது.

இதையும் படிங்க: எடப்பாடி போன அதே இடம்.. ‘வேற’ மாறி பிளான் போட்ட பன்னீர்.. ஆடிப்போன ஈபிஎஸ் தரப்பு - இதுதான் காரணமா!

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொருட்கள் திருடு போனால் அதனை கண்டுபிடிப்பதற்கான காவல் துறை இல்லை. அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான முதலமைச்சரும் இல்லை. நீதிமன்றத்தை நாடியதால் தான் தற்போது அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற முதல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. 32 காலம் ஆட்சி செய்த கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொள்ளை குறித்த புகாரிலேயே இந்த ஆட்சியில் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்றால், இந்த ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. ஏழை மக்கள் மலிவு விலையில் உணவைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் அம்மா உணவகம். அதனை மூடியவர்களுக்கு அடுத்து வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?