அணிகள் இணைவதை பன்னீரின் நால்வர் அணி தடுக்கிறது... எடப்பாடி தரப்பினர் குற்றச்சாட்டு!

 
Published : Apr 26, 2017, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
அணிகள் இணைவதை பன்னீரின் நால்வர் அணி தடுக்கிறது...  எடப்பாடி தரப்பினர் குற்றச்சாட்டு!

சுருக்கம்

Edapadi K Planisami suffered On OPS Team

அதிமுக அணிகள் இணைவதை பன்னீர் தரப்பில் உள்ள 4 பேர் தடுப்பதாக, எடப்பாடி தரப்பினர் குறை கூறி வருகின்றனர்.

பன்னீர் தரப்பில் உள்ள கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், மனோஜ் பாண்டியன் ஆகியோர், தற்போது எம்.எல்.ஏ வாக இல்லாததால், அணிகள் இணைவதால், அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை.

எனவே, ஆட்சி கவிழ்ந்தால்தான், அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ வாக வந்து அமைச்சர் பதவியை பெறமுடியும். அதனால்தான், அணிகள் இணைவதை அவர்கள் தடுத்து வருகின்றனர் என்று எடப்பாடி தரப்பு கூறுகிறது.

ஆகவே, பன்னீரை மூளை சலவை செய்து, அணிகளை இணைய விடாமல் தடுக்கின்றனர் என்பதே, எடப்பாடி தரப்பின் குற்றச்சாட்டாக உள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக 3 தடவை முதல்வர் பொறுப்பில் அமர்ந்து சில காலங்கள் பணியாற்றியவர் பன்னீர். ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் கட்சியிலும், ஆட்சியிலும் இருந்தவர்.

சசிகலாவை பற்றி நன்றாக அறிந்த பன்னீர்செல்வத்தை, எப்படி மூளை சலவை செய்ய முடியும் என்று பன்னீர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அணிகள் இணைப்பு என்ற பேச்சு எழுந்த பொது, அதற்கு பன்னீர் தயாராகவே இருந்தார். ஆனால் அவர் முன்வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால், எடப்பாடியினர் இவ்வாறு கூறி வருவதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து அதிகார பூர்வமாக நீக்க வேண்டும், சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து  ராஜினாமா கடிதம் பெறவேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பன்னீர் தெளிவாக கூறி விட்டார்.

ஆனால் சசிகலா குடும்பத்தினரை அரசியலை விட்டு ஒதுக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்ததை அதிகாரபூர்வமாக ஏற்க முடியாது. சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெறும் வரை, அவர்களின் ஆதிக்கம் கட்சியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆகவேதான், அந்த மூன்று நிபந்தனைகளில் பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். அதை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் எடப்பாடி தரப்பினர், அதை திசை திருப்பவே, இவ்வாறு கூறி வருகின்றனர்.

இவை அனைத்தும் தினகரன் நடத்தும் நாடகம், பன்னீர் அணியை இணைத்து அதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டவுடன், பன்னீருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நீர்த்து போக செய்வதே தினகரனின் திட்டம்.

அதை நிறைவேற்றவே, அமைச்சர்கள், இது போன்ற புரளியை எல்லாம் கிளப்பி வருகின்றனர் என்று பன்னீர் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!