நம்ம எடப்பாடியார் சூப்பர் சிஎம்...!! மக்களுக்காக எப்படியெல்லாம் யோசிக்குறாரு பாருங்க...!!

By Asianet TamilFirst Published Aug 30, 2019, 11:02 AM IST
Highlights

அவசர  காலங்களில்  பயன்படுத்தும் வகையில் எலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தமிழகத்திற்கு அவசியம்  என்பதை உணர்ந்துள்ள முதலமைச்சர் வெளிநாடுகளில் உள்ளதை போல தமிழகத்திலும் எலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  

தமிழகத்தில் எலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என லண்டன் பணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்த அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா, லண்டன், துபாய், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் மருத்துவம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் தமிழகத்தை மேம்படுத்தும் முயற்சியிலும்  அவர் இறங்கியுள்ளார். இந்த நிலையில், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டார் , அங்கு கிங்ஸ் கல்லூரி அரங்கில், மருத்துவமனை மருத்துவர்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை அமைக்க, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார். கிங்ஸ் மருத்துவமனையில் கிளையை சென்னையில் துவக்க  ஒப்புதல் வழங்கிய முதலமைச்சர் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார். 

தமிழகத்தில் நெரிசலான சாலைகளுக்கு இடையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குவது சென்னை போன்ற பெரு நகரங்களில் சவாலாக உள்ளது.  அது மட்டும் அல்லாமல் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது எனவே அவசர  காலங்களில்  பயன்படுத்தும் வகையில் எலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தமிழகத்திற்கு அவசியம்  என்பதை உணர்ந்துள்ள முதலமைச்சர்

வெளிநாடுகளில் உள்ளதை போல தமிழகத்திலும் எலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  இதன் மூலம் நாட்டிலேயே மருத்துவத்துறையில் அதி தொழிலுநுட்பத்தை பயன்படுத்தும் மாநிலம் என்ற சிறப்பும் மருத்துவத்தின் முன்னோடி மாநிலம்  என்ற அந்தஸ்தும் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் பயணத்தை பலர் விமர்சித்து வரும் நிலையில் அவரின் தொலைநோக்கு திட்டங்களும் தமிழகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அவரின் அறிவிப்புகளையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

click me!