15 நிமிடத்தில் பல்டி அடித்தார் ஸ்டாலின்..! "உண்மையிலேயே இதுதான் நடந்தது...சொன்னா கேளுங்க.."டென்ஷனில் முதல்வர்...!

Asianet News Tamil  
Published : May 24, 2018, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
15  நிமிடத்தில் பல்டி அடித்தார் ஸ்டாலின்..! "உண்மையிலேயே இதுதான்  நடந்தது...சொன்னா கேளுங்க.."டென்ஷனில் முதல்வர்...!

சுருக்கம்

edapadi explained about stalins protest

சென்னை தலைமைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்

இன்று காலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தொண்டர்கள், முதல்வர்  தங்களை சந்திக்க அனுமதி தரவில்லை என கூறி  சாலைமறியல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து விளக்கம்  அளித்த தமிழக முதல்வர்.... 

இன்று காலை 11 மணிக்கு சட்டப் பேரவை தலைவர் அறையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது

அப்போது, ஸ்டாலின்  வந்துள்ளார்.தன்னை சந்திக்க வேண்டும் என தெரிவித்து இருந்தாலோ  அல்லது  அலுவல்  கூட்டம் நடைப்பெறும் சமயத்திலேயே அவர் வந்து பேசி  இருக்கலாம்... இதை எல்லாம் செய்யாமல்....

வெளியில் சென்ற ஸ்டாலின்...

ஸ்டாலின் மற்றும் உடன் இருந்த எம்எல்ஏ அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் போது வருகை புரிந்து உள்ளனர்.

பின்னர் ஒரு சில நிமிடங்கள் இருந்துவிட்டு உடனடியாக வெளியில் சென்று விட்டார். ஸ்டாலின் உள்ளே வருகை புரிவதற்கு முன், பதிவு நோட்டில் பெயரை பதிந்து விட்டு தான் வந்துள்ளார்.

அவருடன் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்

அதற்கான ஆதாரம் உண்டு. இந்நிலையில், அலுவலக ஆய்வு கூட்டத்தில் இருந்து கிளம்பிய உடன் சரியாக 15  நிமிடம் கழித்து, அவர் என்னை சந்திக்க நேரம் கேட்டதாகவும், அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததாகவும் ஊடங்களில் செய்தி  வெளியானது.....இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம் அவர்கள் திட்டமிட்டு நாடக மாடுகின்றனர் என தெரிவித்து உள்ளார் எடப்பாடி

மேலும், வேண்டுமென்றே முக ஸ்டாலின் திட்டமிட்ட  நாடகத்தை அரங்கேற்றி உள்ளார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்

தூத்துக்குடி பிரச்சனை பற்றி பேசும் போது....

எதிர்க்கட்சி செயல் தலைவரான ஸ்டாலின் மற்றும் சில அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து  வருகின்றனர் என எதிர்கட்சியை குற்றம் சாட்டி உள்ளார் எடப்பாடி.

குறிப்பாக எதிர்கட்சியான திமுக மற்றும் சில சமூக விரோத அமைப்புகள் தான்  மக்களை தூண்டி விட்டு அவர்களை போராட்டத்தில் குதிக்க வைத்து அப்பாவி ஜனங்கள் பாதிப்படைய செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி உள்ளார் எடப்பாடி.

PREV
click me!

Recommended Stories

விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!