2ஜி, ப.சி வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங் பாஜகவில் போட்டி..!

Published : Jan 10, 2022, 01:13 PM IST
2ஜி, ப.சி வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங் பாஜகவில் போட்டி..!

சுருக்கம்

அமலாக்க துறை  இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங்  விருப்ப  ஓய்வு  ஏற்றுக் கொள்ள பட்டது  ஷகிபாபாத் தொகுதியில்  பாஜக சார்பில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங்  விருப்ப ஓய்வு பெற்று உத்தர பிரதேச தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டி இட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமலாக்க துறை  இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங்  விருப்ப  ஓய்வு  ஏற்றுக் கொள்ள பட்டது  ஷகிபாபாத் தொகுதியில்  பாஜக சார்பில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், லக்னோவில் பணியமர்த்தப்பட்ட ராஜேஷ்வர் சிங் , விஆர்எஸ்-க்கு விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட துறை இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு அவரது நடவடிக்கைக்கு அனுமதித்தது.

தற்போது வரை  ராஜேஷ்வர் சிங் பாஜகவில் இணைவது குறித்தும், விஆர்எஸ் குறித்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுவரை அவர் இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.


அமலாக்கத்துறையில் அவர் நீண்ட காலம் பணியாற்றிய போது, ​​அவர் மிகவும் முக்கியமான வழக்குகளை அதாவது 2G அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குகளை விசாரித்தார். 2010 காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கும் அவருக்கு அளிக்கப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஆகியோரிடமும் இவர் விசாரணை நடத்தினார்.

2018 ஆம் ஆண்டில், துபாயில் இருந்து சந்தேகத்திற்குரிய அழைப்பு வந்ததால்  ராஜேஷ்வர் சிங் சர்ச்சையில் சிக்கினார். இந்த அழைப்பை புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்து, உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், அவர் ஒரு பொறுப்பான அதிகாரி என்று அப்போதைய அமலாக்கத்துறை இயக்குநர் கர்னைல் சிங் கூறியிருந்தார்.

 ராஜேஷ்வர் சிங் பி.டெக் பட்டம் பெற்றவர். போலீஸ், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பாடத்தில் பிஎச்டி முடித்துள்ளார். அவர் உத்தரப்பிரதேசத்தின் 1996 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆனார். உபி காவல்துறை அதிகாரியாக இருந்தார். 2009 இல் அவர் அமலாக்கத்துறையில் சேர்ந்தார். ராஜேஷ்வர் சிங் ஐபிஎஸ் லக்ஷ்மி சிங்கை மணந்தார்.

இவர் மட்டுமல்ல, கான்பூர் போலீஸ் கமிஷனர் அசீம் அருண் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
 பிரதமர் அலுவலக  மோடியின் செயலாளர் A.K. சர்மாவும் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு பாஜகவில் இணைகிறார் என்றும் கூறப்படுகிறது.
உ.பியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமானால் யோகிக்கு மாற்றாக ராஜேஷ்வர் சிங் பெயர் தான் அடிபடுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!