ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ-யின் ரகசிய ஆவணம்!! அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்

 
Published : Feb 08, 2018, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ-யின் ரகசிய ஆவணம்!! அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்

சுருக்கம்

ED found confidential report of CBI in chidambaram residence

ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த ரகசிய ஆவணம், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் கிடைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சிபிஐ-யின் ரகசிய ஆவணம், ப.சிதம்பரத்தின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காக, ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக இந்த நிறுவனத்துக்கு ஒரு தொகை கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது.

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி ப.சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதையடுத்து கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி மற்றும் சென்னையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனவும் ஒருசில காகிதங்களை மட்டுமே அமலாக்கத்துறையினர் எடுத்து சென்றனர் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்நிலையில், ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ-யின் ரகசிய ஆவணம் கடந்த மாதம் ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளதோடு கடிதமும் அனுப்பியுள்ளது. ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கின் ரகசிய ஆவணங்கள் சிதம்பரத்திற்கு கிடைத்தது எப்படி என சிபிஐ விசாரித்து வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த செய்தியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!