மோடிக்கு நன்றி தெரிவிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.. அள்ளிக் கொடுத்த மத்திய அரசை போற்றும் எல். முருகன்.

By Ezhilarasan Babu  |  First Published Feb 2, 2021, 10:17 AM IST

இது தேசத்திற்கும்   தனிமனித வளர்ச்சிக்குமான பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு அதிக நிதி திட்டங்களையும் அள்ளி வழங்கிய பட்ஜெட் என புகழ்ந்துள்ள தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  


இது தேசத்திற்கும்   தனிமனித வளர்ச்சிக்குமான பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு அதிக நிதி திட்டங்களையும் அள்ளி வழங்கிய பட்ஜெட் என புகழ்ந்துள்ள தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட் உரையை தொடங்கிய மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள்  தமிழுக்கு மீண்டும் ஒருமுறை பெருமை சேர்த்துள்ளார். பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நம் நாடு சிறப்பான முறையில் முன்னேறம் அடைய  மிகச் சிறந்த பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயம், ரயில்வே உள்கட்டமைப்பு, தனிநபர் சலுகைகள், தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் என அனைத்து துறைகளிலும் சாதனை புரிய இருக்கும் பட்ஜெட்டை மகிழ்வோடு வரவேற்கிறோம். 

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு  பல்வேறு திட்டங்களை மேம்படுத்த இதுவரை வரலாறு காணாத வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கி உள்ள பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். 34 லட்சத்து 83 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போட்டிருப்பது மகத்தான சாதனையாகும். லட்சம் கோடி கடன் திட்டம் தொடரும் என்ற அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. 63 ஆயிரத்து 146 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் சாலை திட்டத்திற்கும்,  ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி சென்னை மீன்பிடித் துறைமுகங்களை விரிவாக்கத்திற்கும், தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா, 

 

சிறு குறு தொழில்களுக்கு  15 ஆயிரத்து 700 கோடி, சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்புகொரோனா பணிகளுக்கு 38 ஆயிரம் கோடி, பாரத பிரதமரின்  சுகாதார திட்டத்திற்கு  64 ஆயிரத்து 180 கோடி, 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் இருந்து விலக்கு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சலுகைகள், உற்பத்தித் துறைக்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் கோடி, ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி, பாதுகாப்புத்துறை 4 லட்சம் கோடி என நினைத்து பார்க்காத அளவுக்கு  மக்கள்  திட்டங்களுக்கு இந்த பட்ஜெட் ஒரு ஆதாரமாக திகழ்கிறது. இந்த பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும்மான  பட்ஜெட்.  தமிழகத்தின் ஏற்றத்திற்கும் மக்களின் மகிழ்வான மாற்றத்திற்கான பட்ஜெட்டாக விளங்குகிறது. என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!