வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ-பாஸ் கட்டாயம்... ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 6, 2021, 3:15 PM IST
Highlights

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இ- பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் சற்று கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. உதக மண்டலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்குள் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. மாநில அரசின் அனுமதி கிடைத்ததும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

click me!