விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்.. கண்காணிக்க தனியாக குழு.. அமைச்சர் அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2021, 3:05 PM IST
Highlights

இனி வரும் காலங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்டு காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறத்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், 
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் பகுதிகளில் முறைகேடாக கட்டும் கட்டிடங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 

இனி வரும் காலங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்டு காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறத்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை முறையாக அறிவிக்கப்படும், தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

வீட்டுவசதி வாரிய பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். வீடு கட்டுவதற்கு தடையில்லா சான்றுகள் பெற இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், ஏற்கனவே செயலாளர் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், இந்த வாரத்தில் தானும் நேரில் ஆய்வு மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
 

click me!