DVACRaid: திமுக போட்ட ஸ்கெட்ச்.. வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி.. மனைவி, மகன் மீதும் வழக்குப்பதிவு.!

Published : Dec 15, 2021, 11:26 AM IST
DVACRaid: திமுக போட்ட ஸ்கெட்ச்.. வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி.. மனைவி, மகன் மீதும் வழக்குப்பதிவு.!

சுருக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கமணி. 2016 2020ம் ஆண்டு மார்ச் வரை வருவாய்க்கு அதிகமாக தங்கமணி குடும்பம் ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை நடத்தி வரும் நிலையில் தங்கமணி, அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கமணி. 2016 2020ம் ஆண்டு மார்ச் வரை வருவாய்க்கு அதிகமாக தங்கமணி குடும்பம் ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்து வருவாய் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில்,  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 6:45 மணிமுதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், அவருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணியின் தீவிர ஆதரவாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்த சோதனை தொடர்ந்து தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தங்கமணி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை இவர் கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் சோதனை நடைபெற்று முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி