மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் திமுக பொருளாளர் துரை முருகனை அவரது வீட்டில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியை உறுதி செய்யாமல் இழுத்தடித்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணிம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோருடன் கூட்டணி பற்றி தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோட்டுர்புரத்தில் இருக்கும் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக மூத்த நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் சந்தித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பு குறித்து அவர்களிடம் கேட்டதற்கு அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தனர். இது குறித்து துரைமுருகன் கூறுகையில், முதலில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் என்னிடம் போனில் பேசினார். கூட்டணிக்கு வருகிறோம். அதிமுக கூட்டணி வேண்டாம் எனக் கேட்டார். அப்போது எங்களிடன்ம் உங்களுக்கு கொடுப்பதற்கு சீட் இல்லை எனக் கூறி விட்டேன். அதையே தான் இப்போது வந்த நிர்வாகிகளிடமும் கூறி அனுப்பி விட்டேன்.’’ என அவர் தெரிவித்தார்.