மு.க.ஸ்டாலினை மீறி எதுவும் செய்ய முடியாது... வேலூருக்கு வராதேம்மா... கனிமொழியிடம் துரைமுருகன் கெஞ்சல்..!

By Thiraviaraj RMFirst Published Aug 1, 2019, 12:33 PM IST
Highlights

’எங்கப்பா எங்களை விட துரைமுருகன் மீது தான் பாசமாக இருப்பார்’ என கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது கூறி துரைமுருகனை கலங்கி கலங்கி அழ வைத்தார் கனிமொழி.

’எங்கப்பா எங்களை விட துரைமுருகன் மீது தான் பாசமாக இருப்பார்’ என கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது கூறி துரைமுருகனை கலங்கி கலங்கி அழ வைத்தார் கனிமொழி. ஆனால், அப்படிப்பட்ட கனிமொழியை தனது மகன் கதிர் ஆனந்துக்கு பிரச்சாரம் செய்ய வராமல் தடுத்து விட்டார் துரைமுருகன். 

வேலூரில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. திமுக சார்பில் உதயநிதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வேலூரில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், கனிமொழி மட்டும் பிரச்சாரத்திற்கு வரவில்லை. இத்தனைக்கு அவர் மகளிரணி செயலாளராக உள்ளார்.

முன்னதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடந்த ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் வேலூரில் கனிமொழி பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தும் அவர் வரவில்லை. அதாவது, வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட நியமிக்கப்பட்டவர்களில், மகளிர் அணி நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனால் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதை திமுக தலைமை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. முன்னதாக பிரச்சார பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததைக் கண்ட கனிமொழி, உடனே துரைமுருகனிடம் இரு நாட்களைக் குறித்து கொடுத்துள்ளார். 

இருப்பினும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோருக்கு தேதியை அறிவிக்கிறார்கள். ஆனால், எனக்கு மட்டும் தேதி கொடுக்கவில்லை என்று முக்கிய நிர்வாகிகளிடம் கனிமொழி புலம்பி தள்ளியுள்ளார். இதற்கு பதில் கூறிய அவர்கள், நாடாளுமன்றத்தில் நிறைய பணிகள் இருக்கின்றன. எனவே நீங்கள் பிரச்சாரத்திற்கு வர வேண்டியதில்லை. இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சமாதானம் செய்துள்ளனர். 

இதையும் படிங்க:- தற்கொலைக்கு ஒரு மணி நேரத்துற்கு முன் 50000 பேருக்கு சம்பளம் போட்ட சித்தார்த்தா... சாவிலும் மாறாத நேர்மை..!

கனிமொழிக்கு ஏன் துரைமுருகன் முக்கியத்துவம் தரவில்லை? மு.க.ஸ்டாலின் குடும்பத்தை பகைத்துக் கொள்ள விரும்பாததால், இப்படி கனிமொழியை துரைமுருகன் தவிர்த்து விட்டதாக கூறுகின்றனர். முன்னதாக திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட போது, கட்சியின் சீனியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, துரைமுருகன் மகன், ஆற்காடு வீராசாமி மகன், பொன்முடி மகன் ஆகியோருக்கு சீட் கொடுத்து சமாதானப்படுத்தினர். எனவே இதற்கு பிரதிபலனாக ஸ்டாலின் குடும்பத்திடம் சீனியர்கள் நடந்து வருகின்றனர். 

திமுக என்றால் அது மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தான் என்ற வகையில் செயல்பாடுகள் இருப்பதாக கழகத்தினர் வேதனைப்படுகின்றனர். 

இதையும் படிங்க:- ஆடி 18 கழிச்சு எடப்பாடிக்காக ஆட்டத்தை ஆரம்பிக்கும் பி.கே... அதிமுகவுக்காக களத்தில் குதிக்கும் 1200 ஐடி ஊழியர்கள்... கிலியில் திமுக ஐடி விங்..!
 

click me!