போனது நூறு பேருனா... வரப்போறது ஆயிரம் பேரு... எடப்பாடி- ஸ்டாலினுக்கு திடீர் ஷாக் கொடுக்கும் டி.டி.வி.,அணி..!

Published : Aug 01, 2019, 12:05 PM ISTUpdated : Aug 01, 2019, 01:06 PM IST
போனது நூறு பேருனா... வரப்போறது ஆயிரம் பேரு...   எடப்பாடி- ஸ்டாலினுக்கு திடீர் ஷாக் கொடுக்கும் டி.டி.வி.,அணி..!

சுருக்கம்

மக்களவை தேர்தல் தோல்வியால் சற்று ஓய்ந்திருந்த டி.டி.வி.தினகரன் தற்போது தனது வழக்கமாக ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

மக்களவை தேர்தல் தோல்வியால் சற்று ஓய்ந்திருந்த டி.டி.வி.தினகரன் தற்போது தனது வழக்கமாக ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சி டெபாசிட் கூட வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். முக்கிய அக்கட்சியில் நம்பிக்கையாக நட்சத்திரமாக திகழ்ந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்தனர். இது டி.டி.வி.தினகரனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

 

இதனையடுத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும், கட்சியை பதிவு செய்த பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்று வரும் திருமண நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.

 

இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வருகிற 04.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி அளவில் வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெளியேறிய நிலையில் மாற்று கட்சியினர் அமமுகவில் இணைய உள்ளனர். இதனால், டி.டி.வி.தினகரன் தனது வழக்கமான ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கேரளாவில் தலைநகரத்தை அடித்துத் தூக்கிய பாஜக..! 45 ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!
நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி