மு.க.ஸ்டாலின் முதல்வராக கோயில் கட்டும் துர்கா... முருகனிடம் தஞ்சம் கேட்கவும் ஏற்பாடு..!

By Thiraviaraj RMFirst Published Sep 2, 2020, 12:01 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தனது குலதெய்வம் கோயிலை புனரமைத்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.
 

மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தனது குலதெய்வம் கோயிலை புனரமைத்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.

கருணாநிதி குடும்பம் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் கோயில், குளம் என பக்திமயமாக கடவுள் பற்றுதலோடு வலம் வருகிறார் ஸ்டாலின் மனைவி துர்கா. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தனது குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து மிகப்பெரிய அளவில் கட்டி வருகிறார்.

இந்தக் கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டும் பணிகளை சமீபத்தில் நேரில் சென்று துர்கா பார்வையிட்டார். கோயில் புனரமைக்கப்பட்டு வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளார். கோயில் கட்டுமான பணிகளை பார்வையிட வந்த துர்காவின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படியே குல தெய்வம் கோயிலை புனரமைக்கும் பணிகளை துர்கா துவக்கி உள்ளதாக கூறுகின்றனர். அதனை தொடர்ந்து பழநி, திருச்செந்துார் முருகன் கோயில்களில் பவுர்ணமி தினத்தில் வழிபாடு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதேவேளை இந்த வீடியோ திட்டமிட்டு திமுகவினரே வெளியிட்டதாகவும் கூறுகின்றனர். காரணம், இந்து கடவுள் எதிர்ப்பை கடைபிடித்து வந்த திமுக, சமீபகாலமாக இந்துமத கடவுள் மீது நாட்டம் கொண்ட கட்சியாக காட்டிக் கொள்ள முனைகிறது. ஆகையால் இந்த வீடியோவை திமுகவினரே வெளியிட்டதாக கூறுகிறார்கள். 
 

ஸ்டாலின் முதலமைச்சராக குலதெய்வ கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஆயத்தமாகும் துர்கா ஸ்டாலின்..

ஊருக்கு உபதேசம் செய்யும் திமுகவினர்...

ஆதாய வழிபாடுகளை தெய்வம் ஏற்பதில்லை..

சுடலைக்கு சங்குதான்.. pic.twitter.com/nIrowo9lUu

— வணங்காமுடி® (@itz_katti)

 

click me!