பெருமாள் சிலையை வாங்கிய துர்க்கா ஸ்டாலின்... இத்தனை இடங்களில் கோயில் கட்டுகிறாரா..?

Published : Oct 04, 2021, 12:30 PM IST
பெருமாள் சிலையை வாங்கிய துர்க்கா ஸ்டாலின்... இத்தனை இடங்களில் கோயில் கட்டுகிறாரா..?

சுருக்கம்

இந்த சிலையை ஆர்டர் கொடுத்தவர் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அந்த சிலையை சந்திரிகா வாங்காமல் போக, அதனை இப்போது துர்கா ஸ்டாலின் வாங்கியுள்ளார்.   

மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்களை பகுத்தறிவுவாதிகள் எனக் காட்டிக் கொண்டாலும், அந்த குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பல்வேறு கோயில்களில் நேர்த்திக் கடன் நேர்ந்து இருந்தார். இதனை அடுத்து மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதால்; வேண்டுதல்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். 

இந்தநிலையில் காசி விஸ்வநாதர் ஆலயம், கேதார்நாத் சென்று சில வேண்டுதல்களை நிறைவேற்ற இருக்கிறார். நேபாளத்தில் உள்ள பிரபல சிவன் கோயிலுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சில முக்கியமான கோயில்களையும் கட்ட தயாராகி வருகிறார் துர்கா ஸ்டாலின். சமீபத்தில் மகாபலிபுரத்தில் பெருமாள் சிலை ஒன்றையும் வாங்கி இருக்கிறார் துர்கா ஸ்டாலின். இந்த சிலையை ஆர்டர் கொடுத்தவர் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அந்த சிலையை சந்திரிகா வாங்காமல் போக, அதனை இப்போது துர்கா ஸ்டாலின் வாங்கியுள்ளார். 

அடுத்து கிருஷ்ணகிரியில் துர்கா ஸ்டாலின் கட்டிக் கொண்டிருக்கும் கோயிலில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண்காடு ஆகிய பகுதிகளிலும் துர்கா ஸ்டாலின் பல்வேறு கோயில்களை கட்டிக் கொண்டிருக்கிறார். இத்தோடு இல்லாமல் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை கோயில் நிர்வாகத்திடமும் பக்தர்கள் தங்குவதற்காக கட்டடம்  கட்ட அனுமதி இடம் கேட்டுள்ளார் துர்கா ஸ்டாலின் எனக் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!