கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... திமுகவுக்கு தலைவலி... துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது போலீசில் புகார்..!

Published : Apr 09, 2019, 02:38 PM ISTUpdated : Apr 09, 2019, 02:47 PM IST
கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... திமுகவுக்கு தலைவலி... துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது போலீசில் புகார்..!

சுருக்கம்

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில், தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில், தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை முடிந்த நிலையில் துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் திமுகவின் தேர்தல் வியூகம் தொடர்பான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்பட்டது. 

இதனையடுத்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அந்த குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும் பூஞ்சோலை சீனிவாசன் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கதிர் ஆனந்தின் வீட்டில் இருந்து அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்துள்ளார். இது திமுக தலைமைக்கு பெரும் சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு