தினகரனுடன் அண்டர்கிரவுண்ட் லிங்கில் எட்டு அமைச்சர்கள்... 10 தொகுதிகளில் ஆட்டம் காணும் அ.தி.மு.க..! பல்ஸ் எகிறும் எடப்பாடியார்..!

By Vishnu Priya  |  First Published Apr 9, 2019, 2:16 PM IST

தேர்தலின் மூலமாகதான் அ.தி.மு.க. தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருக்கப்போகிறதா அல்லது ஆட்சியை இழக்கப்போகிறதா  என்பதெல்லாம் உறுதியாகப் போகிறது. அது சரி, எடப்பாடியார் ஏன் பதற்றத்துடன் பதிலளிக்கிறார்?! என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இருக்கிறது காரணம்...தேர்தல் நடக்க இருக்கும் பதினெட்டு தொகுதிகளில் பாதிக்குப் பாதிதான் அ.தி.மு.க.வுக்கு பிளஸ்ஸாக இருக்கிறதாம்.


தமிழக முதல்வர் எடப்பாடியாரிடம் ‘நாற்பது பெருசா? இல்ல, பதினெட்டு பெருசா?’ன்னு கேட்டால் பதறிய முதகத்தோடு அவர் சொல்லும் வார்த்தை ‘சந்தேகமென்ன பதினெட்டுதான்.’ என்பார். ஆம், தமிழகத்தின் நாற்பது தொகுதிகளில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை விடவும், பதினெட்டு தொகுதிகளில் நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்தான் அ.தி.மு.க.வுக்கு மிக முக்கியம். 

காரணம்?...அந்த தேர்தலின் மூலமாகதான் அ.தி.மு.க. தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருக்கப்போகிறதா அல்லது ஆட்சியை இழக்கப்போகிறதா  என்பதெல்லாம் உறுதியாகப் போகிறது. அது சரி, எடப்பாடியார் ஏன் பதற்றத்துடன் பதிலளிக்கிறார்?! என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இருக்கிறது காரணம்...தேர்தல் நடக்க இருக்கும் பதினெட்டு தொகுதிகளில் பாதிக்குப் பாதிதான் அ.தி.மு.க.வுக்கு பிளஸ்ஸாக இருக்கிறதாம். மீதி தி.மு.க. பாக்கெட்டுக்குள் நுழைய துடிக்கிறதாம். இது போக, அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கும் ஒன்பதிலும் கூட சிலவற்றை பறிக்க தினகரன் அதிரடியான அண்டர் கிரவுண்டு வேலை பார்ப்பதுதான் காரணம். 

Tap to resize

Latest Videos

தமிழக உளவுத்துறை கொடுத்திருக்கும் சர்வே ரிசல்ட்டின் சாராம்சத்தை ஸ்மெல் செய்திருக்கும் ஒரு வி.ஐ.பி. அரசியல் விமர்சகர் சொல்வது இதுதான்...”இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளில் பெரம்பூர், அரூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர், திருப்போரூர், பூந்தமல்லி ஆகிய ஒன்பது மட்டுமே ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழலை காட்டுகின்றன. மீதி ஒன்பதிலும் சறுக்கிக் கொண்டிருக்கிறது ஆளும் கூட்டணி.

தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க அந்த கட்சியினரே கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனராம். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை வாசனுக்கு தாரை வார்த்ததை அந்த கட்சிக்காரங்க விரும்பலை. இதனால் டோட்டலா அ.தி.மு.க. காரங்களே தலைமை மீது வெறுப்பில் இருக்கிறாங்க. நிலக்கோட்டையில போனதடவை ஜெயித்த தங்கதுரையையே தினகரன் வேட்பாளராக்கி இருக்கிறார். தினகரன் பாசம், வேட்பாளர் மீது பரிதாபம் ஆகிய காரணத்தினால் வாக்கு பெரியளவில் பிரியுது. திருவாரூரில் கஜா பிரச்னையை சொல்லியே அ.தி.மு.க.வை கடுமையா வெறுக்கிறாங்க மக்கள். 

மானாமதுரையிலும் தினகரனின் வேட்பாளர் துள்ளலா இருக்கிறார். விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்கண்டேயன், அ.தி.மு.க. வேட்பாளரை அலற வைக்கிறார். இப்படி ஒன்பது தொகுதிகளிலும் பல பிரச்னைகளை அ.தி.மு.க. சந்திச்சுட்டு இருக்குது. இதெல்லாம் போக மிக முக்கிய ஹைலைட் ஒண்ணு இருக்குது. அதாவது, இடைத்தேர்தல் பல்ஸை பக்காவா ஸ்கேன் செஞ்சுட்ட சுமார் எட்டு அமைச்சர்கள் தினகரனுக்கு தூதுவிட்டு, நட்பை புதுப்பிச்சுட்டாங்கன்னு தலைமைக்கு தகவல். ’ஆட்சி கவிழும், கட்சி தினகரனிடம் போகும், இனி அவரை அண்டி வாழுறதுதான் நல்லது’ன்னு முடிவு பண்ணி இந்த முடிவை எடுத்திருக்காங்களாம்.  

இவங்க இப்படியொரு முடிவை தில்லா எடுக்குற அளவுக்கு தினகரனும் கிட்டத்தட்ட பத்து தொகுதிகளில் படு பக்காவாக அண்டர்கிரவுண்டு வேலை பார்த்திருக்கிறார். தன்னோட களப்பணியாளர்களிடம் அவர் வேலை வாங்கும் ஸ்டைலே தனியா இருக்குது. அதாவது இடைத்தேர்தல் தொகுதிகளின் வேட்பாளர்களிடம் ‘ஆட்சியை கவுத்துடா! ரெண்டு பேரையும் மாஜி ஆக்குவோம்டா’ன்னு ஏதோ நண்பனிடம் சவால்விட்டு பேசுவது போல், தோளை கட்டிப்பிடிச்சு பேசி உருவேத்துறார்.

இதுல சிலிர்த்து எழுற வேட்பாளர்கள் எடப்பாடியார், பன்னீர் இருவர் மேலேயும் வெறுப்பை வீசி மிகக் கடுமையா களப்பணியாற்றுறாங்க. இதே ‘ஆட்சியை கவுத்துடா’ மந்திரத்தைதான் தன்னை நாடி வரும் சிட்டிங் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் வட்டாரத்திலும் கெத்தா பேசுறார் தினகரன்.” என்கிறார்கள். தேர்தல் வரைக்கும் மட்டுமில்லை, அதுக்குப் பிறகும் பெரிய என்டர்டெயின்மெண்ட் இருக்குதுடோய்!

click me!