நண்பன் கமலை கழற்றிவிட்டு பாஜகவுக்கு ரஜினி ஆதரவு..!

By Thiraviaraj RMFirst Published Apr 9, 2019, 2:16 PM IST
Highlights

நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அரசியலில் அவர் பாஜகவுக்கு ஆதரவான நிலையில் இருப்பதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. 

நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அரசியலில் அவர் பாஜகவுக்கு ஆதரவான நிலையில் இருப்பதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. நதிகளை இணைத்தால் நாட்டில் பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும். நாட்டில் வறுமை தீர்ந்து விடும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைக்க நடவடிக்கை எர்டுக்க வேண்டும். 

நதிகளை இணைப்பது குறித்து முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயிடம் பேசும்போது பகீரத யோஜனா எனப் பெயர் வைக்கக்கோரி இருந்தேன். பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.  ஆனாலும், தேர்தல் நேரம் என்பதால் அதிகம் பேச விரும்பவில்லை. என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.

 

ஆதரவு விவகாரத்தை பெரிதாக்கி நட்பில் விரிசலை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். அவர் ஆதரவு கோரியது குறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை. ஏற்கெனவே நதிகளை இணைப்பவர்களுகே தனது ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும் என கூறியிருந்தார் ரஜினி. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி தன் கட்சியை ஆதரிக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார். 

click me!