8ம் வகுப்பு வரை பெயிலே கிடையாது... தமிழக அரசு திட்டவட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 9, 2019, 1:11 PM IST
Highlights

8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தது. இதில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய உத்தரவு குறித்து தமிழக அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், 8ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்வில் தோல்வி அடைய செய்யக்கூடாது என்று பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை. மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், 9ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள் ஜூன் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை உடனடி தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக்கூடாது மீறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஆர்.டி.இ சட்டத்திருத்தத்தை ஏற்கவும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  

click me!