நீங்க எல்லாம் பூஜ்ஜியம்... பேசவே கூடாது... ஸ்டாலினுக்கு நெத்தியடி கொடுத்த பொன்னார்..!

Published : Apr 09, 2019, 01:04 PM ISTUpdated : Apr 09, 2019, 01:34 PM IST
நீங்க எல்லாம் பூஜ்ஜியம்...  பேசவே கூடாது... ஸ்டாலினுக்கு நெத்தியடி கொடுத்த பொன்னார்..!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூஜ்யத்துக்குள் ராஜ்யம் நடத்துவதாக மத்திய இணையமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூஜ்யத்துக்குள் ராஜ்யம் நடத்துவதாக மத்திய இணையமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். 

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் பாஜக தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் தெரிவித்திருந்தார். 

இவரது கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல. பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும்’ என்று குறிப்பிட்டார். 

மேலும் அவர் கூறுகையில் வடை சுடுவதையும், அடை சுடுவதையும் வைத்து ஒரு தேர்தலை சந்திக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசு சிந்தித்து முடிவு எடுக்கும். இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் எது நன்மையோ அதை நிச்சயம் செய்வார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!