பொதுமக்களை நெகிழவைத்த ஈரோடு அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன்!! பிரசாரத்தில் நடந்த சுவாரஷ்ய சம்பவம்...

By sathish kFirst Published Apr 9, 2019, 12:45 PM IST
Highlights

மக்களோடு தன் மண்ணையும் சேர்த்தே நினைத்து ‘அவற்றையும் பாதுகாப்பேன்’ என்று ஈரோடு வேட்பாளர் வெங்கு மணிமாறன் தனது பிரசாரத்தின்போது உறுதி மொழி கூறுவது, மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களோடு தன் மண்ணையும் சேர்த்தே நினைத்து ‘அவற்றையும் பாதுகாப்பேன்’ என்று ஈரோடு வேட்பாளர் வெங்கு மணிமாறன் தனது பிரசாரத்தின்போது உறுதி மொழி கூறுவது, மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் பிரதிநிதி - என்பவர் தன் தொகுதியில் உள்ள மக்களுக்கான பிரதிநிதியாக மட்டும் நகர்மன்றங்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் பேசுபவர் மட்டுமில்லை. தன் தொகுதி சார்ந்த நிலவளத்தை, ஜீவராசிகளை, நீர்வளத்தை, சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு அவர் தோளிலும், மூளையிலும், மனதிலும் படர்ந்திருக்கிறது. இதை செய்பவர்தான் உண்மையான மக்கள் பிரதிதி. 

காரணம்? மண்ணும், நீரும் இல்லையென்றால் மக்கள் வாழ்வதேது. இப்போது புரிகிறதா இந்த சூட்சமம். 

ஒரு வேட்பாளரானவர் இப்படி தன் தொகுதியின் ஒட்டுமொத்த நலனையும் பாதுகாப்பவராக இருப்பாரா? என்பதை அவரது பிரசார காலத்திலேயே கண்டறிந்துவிடலாம். பொதுவாக எல்லா வேட்பாளர்களும் மக்களின் நலத்தைப் பற்றி மட்டுமே பேசுவது வழக்கம், ஆனால் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியிருக்கும் வெங்கு மணிமாறன், மக்களோடு தன் மண்ணையும் சேர்த்தே நினைத்து ‘அவற்றையும் பாதுகாப்பேன்’ என்று உறுதி மொழி கூறுவது, மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சமீபத்தில் கொடுமுடி, சிவகிரி பகுதியில் அமைச்சர் கருப்பணன் தனக்காக ஆதரவு தெரிவித்து பேசி வர, புன்னகை மற்றும் கூப்பிய கரங்களுடன் பிரசாரத்தில் இருந்தார் வேட்பாளர் வெங்கு மணிமாறன். 

அப்போது ஒரு இடத்தில் இவர்களை வரவேற்று,  பெரியதாதாக பட்டாசை வெடித்தனர் இளைஞர்கள். உடனே அமைச்சர் அவர்களை அழைத்து ‘இப்படி பட்டாசு வெடித்துக் காசை கரியாக்குவதை விட, இங்கிருக்கும் ஏழை குழந்தைகளுக்கு புத்தகம், துணிகள் வாங்கிக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கை நலமாகும், உங்களுக்கும் புண்ணியம் சேரும். அல்லது கோயிலில் காணிக்கையாக போட்டால் இறையருள் கிடைக்கும். 

பட்டாசு வெடித்தால்  வரும் புகையினால் காற்று மாசுபடும், ஒலி மாசும் உருவாகும்.” என்றார். 

அமைச்சர் சொன்ன கருத்தின் ஆழத்தை ஏற்கனவே புரிந்து வைத்திருந்த வேட்பாளர் மணிமாறன் அதை ஆதரித்ததோடு, அதன் பிறகு தனக்கான வரவேற்பில் பட்டாசை தவிர்க்க சொல்கிறார். காரணம் கேட்கும் ஆர்வமிகு தொண்டர்களிடம் “இந்த பகுதியில் உடல் நிலை சரியில்லாத நபர்கள் இருப்பார்கள், சிறு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும், கர்ப்பிணிகள் இருப்பார்கள். நமது பட்டாசின் ஒலி அவர்களின் அமைதியை குலைக்கும். மேலும் காற்றில் பரவும் இந்தக் கரும்புகையால் சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகும். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் உனக்கும், எனக்கும், எல்லோருக்கும் கேடுதான் என்று பாடமே நடத்திவிட்டார். 

வேட்பாளர் வெங்கு மணிமாறன், இப்படி மனிதர்களோடு சேர்த்து தொகுதியின் இயற்கை சூழலையும் நேசிக்கும் செயல் வாக்காளர்களிடையே பெரும் ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த மாதிரியான வெயிட்டேஜ்களாலும், இயல்பாகவே தனக்கு இருக்கும் ஆதரவினாலும், அதிமுகவின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாலும் ரேஸில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது இந்த காங்கயம் காளை. 

click me!