
அடுத்த ஆறு மாதத்தில் தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடக்கும் என்றும், அப்போது திமுக பெரும்பான்மை பெற்று ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை முருகன் தெரிவித்தார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரை முருகன், இதனைத் தெரிவித்தார். எந்த அடிப்படையில் இவ்வாறு கூறிகிறீர்கள் என்ற கேள்விக்கு, தமிழக அரசியலை நீண்ட நாட்களாக கவனித்து வருவதாகவும், இது குறித்து மேலும் கூறினால் வினாத்தாள் ஆகிவிடும் என்று கூறினார்.
தற்போது அதிமுக உள்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடாது என்றும், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் துரை முருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி செய்வதில் தவறில்லை என்றும், ஆனால் அது இங்கு ஒரு போதும் நடக்காது என்றும் துரை முருகன் தெரிவித்தார்.
வைகோ ஒரு அவசரக் குடுக்கை என்றும் அவரது உழைப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீர் என்னும் துரைமுருகன் கூறினார்.