தீபா சொன்ன அறிவுரை - மாதவன் விதித்த நிபந்தனை!

Asianet News Tamil  
Published : Apr 23, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
தீபா சொன்ன அறிவுரை - மாதவன் விதித்த நிபந்தனை!

சுருக்கம்

deepa advice to madhavan

தீபாவின் கணவர் மாதவன், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி விட்டார். 

கட்சி தொடங்குவதற்கு, சென்னையில் யாரும் இடம் கொடுக்க மறுத்ததால், வேறு வழியின்றி ஜெயலலிதா சமாதியிலேயே தொடங்கி விட்டார்.

கட்சி தொடங்குவதற்கு முதல் நாளே, தீபா அவரிடம், உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை எல்லாம். இருக்கும் குழப்பம் போதாது என்று புது கட்சி வேறு தொடங்கி குட்டையை குழப்ப வேண்டுமா? என்று கேட்டுள்ளார்.

எல்லாம் சரிதான், நீ முதலில் பொறுப்பாளராக நியமித்துள்ள ராஜாவையும், அவர் குடும்பத்தையும் மூட்டை கட்டி அனுப்பு, அதன் பிறகு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படலாம் என்று நிபந்தனை விதித்துள்ளார் மாதவன்.

ஆனால். மாதவனின் கோரிக்கையை தீபா ஏற்க மறுத்து விட்டார். அதனால், தாம் ஏற்கனவே, முடிவு செய்திருந்தபடி, தமது ஆதரவாளர்களுடன் சென்று மறு நாளே, ஜெயலலிதா சமாதியில் கட்சி ஆரம்பித்து விட்டார்.

தற்போது, அதிமுகவின் இரு அணிகளும் இணைவது பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அந்த பேச்சு வார்த்தை முடிந்து அதிமுக ஒன்றுபடும்போது, அத்துடன் தமது கட்சியை இணைத்து விடும் முடிவில் மாதவன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, தினகரன் தரப்பில் இருந்தும் மாதவனுக்கு அழைப்பு வந்துள்ளதாம். ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையில், அவரை சந்திப்பது நன்றாக இருக்காது என்று நினைத்த மாதவன், கொஞ்ச நாள் கழித்து சந்திக்கலாம் என்று தினகரனிடம் கூறி விட்டதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!