துரை முருகனுக்கு அடிக்கப் போகும் லக்கி…. திமுக பொருளாளராகிறார் !! எப்போ தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Aug 14, 2018, 12:27 AM IST
Highlights

இன்று கூடவுள்ள  திமுக செயற்குழுக் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், திமுக தலைவராக ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதற்கு பொதுக்குழுவைக் எப்போது  கூட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. அப்படி முடிவு செய்யப்பட்ட தேதியில்  பொதுக்குழு கூடி ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரை முருகன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில்,நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில், இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில், கருணாநிதியின் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

முக்கிய நிர்வாகிகள், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது..

செயற்குழு கூட்டத்திற்கு பின், பொதுக்குழுவை கூட்டுதல், தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்தல் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைத்தல் உட்பட, பல விஷயங்கள் குறித்து, அடுத்தடுத்து ஆலோசிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

தலைவர் மட்டுமல்லாமல் தற்போது திமுகவிற்கு பொருளாளர் பதவியும் நிரப்பப்படவுள்ளது. ஏற்கனவே திமுக பொருளாளராக ஸ்டாலின்தான் இருந்து வருகிறார். கருணாநிதி உடல் நலம் குன்றியபோது, பொருளாளர் பதவியுடன் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் திமுகவுக்கான புதிய பொருளாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் செயற்குழுவைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளாராக துரை முருகனும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

click me!