"இடத்திற்கு நானே போராடியிருப்பேன்" என்று கூறிய ரஜினியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

Published : Aug 14, 2018, 12:03 AM ISTUpdated : Sep 09, 2018, 07:15 PM IST
"இடத்திற்கு நானே போராடியிருப்பேன்" என்று கூறிய ரஜினியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

சுருக்கம்

 "கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு மட்டும் இடம் தராமல் இருந்திருந்தால் நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன்" என்று கூறினார். 

தென்னிந்திய நடிகர் சங்க நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய ரஜினியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஆளும் எடப்பாடி அரசினை கடுமையாக சாடினார். 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு காமராஜர் அரங்கத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் "கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு மட்டும் இடம் தராமல் இருந்திருந்தால் நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன்" என்று கூறினார். 

இதே ரஜினிகாந்த் அவர்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், "எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டே இருந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்" என்று கூறியிருந்தார். அவ்வாறு கூறிய ரஜினிகாந்த் தற்பொழுது இவ்வாறு கூறுவது நெட்டிசன்களுக்கு ஏற்ற விஷயமாக அமைந்துவிட்டது. இதனை வைத்து நடிகர் ரஜினிகாந்தை சமூக வலைத்தளங்களில் தற்பொழுது கலாய்த்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!