துரைமுருகன் துபாயிலிருந்து இறக்கிய பணத்தில் சிக்கியது 10 சதவிகிதம்தான்... புட்டு புட்டு வைக்கும் ஏ.சி.சண்முகம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 11, 2019, 3:03 PM IST
Highlights

துரைமுருகன் துபாயில் தொழில் நடத்தி அதன் மூலம் பலகோடிகளை தேர்தலுக்காக இறக்கியுள்ளதாகவும், அதன் மூலம் 10 சதவிகித பணம் மட்டுமே சிக்கியுள்ளதாகவும் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் துபாயில் தொழில் நடத்தி அதன் மூலம் பலகோடிகளை தேர்தலுக்காக இறக்கியுள்ளதாகவும், அதன் மூலம் 10 சதவிகித பணம் மட்டுமே சிக்கியுள்ளதாகவும் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் களமிறங்குகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு 10 லட்சம் பணமும், அவருக்கு நெருக்கமானவரின் சிமெண்ட் குடோனில் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையும் பிடிபட்டது. 

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், ’’துரைமுருகன் 15 ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். ஓரே வருடத்தில் மணல் மூலம் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என அவர் தான் பட்டியல் போட்டு பேசுகிறார்.

கிட்டத்தட்ட துபாயில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். மலேசியாவில் 20 ஆண்டுகளாக ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார். அவரது மகன், மருமகல் பினாமி பெயர்களில் எல்லா கம்லெனிகளும் இயக்கி வருகிறது. கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் துபாயில் இருக்கிறது. கதிர் ஆனந்த் தேர்தல் அறிவிக்கும் முன் துபாயில்தான் இருந்தார். மொத்தப்பணமும் ஹவாலா மூலமாக மூட்டை மூட்டையாக இங்கே கொண்டு வந்திருக்கிறார். சிக்கியது 6ல் ஒன்று தான். இன்னும் ஐந்து பாகம் சிக்காமல் இருக்கிறது. வருமான வரித்துறையினர் இன்னும் அதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

click me!